உழைக்காமல் வரும் பணம் நிலைக்காது ‘ரூபாய்’ விமர்சனம்..!
இயக்குனர் தயாரிப்பாளர் பிரபுசாலமோன் நிறுவனத்தின் புதிய படம் ‘ரூபாய்’. பெயரை பார்த்ததும் ஏதோ அரசை குறை சொல்லப்போகும் படம் என்ற நினைப்பில் உள்ளே வருபவர்களுக்கு உண்மையை சொல்லியிருக்கிறது கதை அதற்காகவே இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் ஒரு சபாஷ் போடலாம்.
விமர்சனத்திற்கு போவதற்கு முன்பு கதை...
குடியிருக்கும் வீட்டுக்கு வாடகையே தராமல் இழுத்தடிக்கும் ஒரு கேரக்டர் சின்னி ஜெயந்த். அவர் மகள் ஆனந்தி. வீட்டை காலி செய்ய வாடகை வண்டி தேடுகிறார்.
தேனியில் இருந்து கோயம்பேடுக்கு பூ ஏற்றி வரும் ஹீரோவின் வண்டியை அழைக்கிறார். அங்கே ஆனந்தியை பார்த்ததும் ஆனந்தி மீது காதல் ஏற்படுகிறது. வீட்டு சாமான்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு போகிறார்கள். அங்கே வீட்டுக்காரர் வீடு தரமறுக்கிறார். வேறு வீடு தேடி அலைகிறார்கள். இதற்கிடையில் வங்கியில் கொள்ளை அடித்த பணத்தை போலீஸ் சோதனைக்கு பயந்து இவர்களின...









