பீட்டா சதி… பா.ஜ.க.அரசுக்கு தெரியாதா? கொந்தளிக்கும் நடிகர் சிவகுமார் அறிக்கை….!!!
பீட்டா சதி... பா.ஜ.க.அரசுக்கு தெரியாதா? கொந்தளிக்கும் நடிகர் சிவகுமார் அறிக்கை....!!!
பல மாணவர்கள், மாணவிகள், பிரபலங்கள் என பசியும் பட்டினியுமாக மெரினா கடற்கரையில் உச்சி வெய்யிலில் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை தீவிர படுத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்து வரும், மூத்த நடிகர் சிவகுமார் தனது கருத்து குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியுள்ளது .
கம்பீரத்துக்கும், அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம்.
குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து, பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு பிடிக்கும் விளையாட்டு, தமிழ் மண்ணில் நடந்து வருகிறது.
ஸ்பெயினில் மாடு பிடிப்பதென்பது, விளையாட்டின் இறுதியில், மாட்டின் முதுகில் கத்திகளைச்சொருகி, நாக்கை வெளியே தள்ளியவாறு, அந்த மாடு கீழே விழுந்து இறந்தபின், அதை எடு...
