பாடகரான விக்ரம் – தமன்னா நடிக்கும் “ ஸ்கெட்ச் ” விஜய்சந்தர் இயக்குகிறார்
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ஸ்கெட்ச் “
மிக பிரமாண்டமான முறையில் தயாராகும் இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார்.
மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவிகிஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.
விஜய்சந்தர் இயக்குகிறார்.
இந்த படத்திற்காக விஜய்சந்தர் எழுதிய
“ கனவே கனவே
புது கனவே
விழிக்கும் போதும்
வரும் கனவே “ என்ற பாடலை நடிகர் விக்ரம் பாட தமன் இசையில் பதிவு செய்யப்பட்டது.
படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டது. முப்பது நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இ...
