கர்நாடக அரசுக்கு விஷால் நன்றி..!
காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவித்த கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சருக்கு நடிகர் விஷால் நன்றி கடிதம் அனுப்பியுள்ளார்.
நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நாம் அனைவருமே ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். பிறந்த இடத்தாலோ வாழும் மாநிலத்தாலே பேசும் மொழியாலோ வேறுபட்டாலும் இந்திய நாட்டின் பிள்ளைகளாக ஒன்றுபடுகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 1-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நீர்பாசன ஆண்டான கணக்கிடப்படுகிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இதில் ஜுன் மாதம் 10.16 டிஎம்சி தண்ணீரும், ஜுலை மாதம் 42.76 டிஎம்சி, ஆகஸ்ட் 54.72 டிஎம்சி, செப்டம்பர் 29.36 டிஎம்சி, அக்டோ...








