பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயண செலவு விவரங்கள் வெளியிட வேண்டும் -தகவல் ஆணையர்
மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான லோக்கேஷ் பத்ரா தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் பிரதமர் மோடி கடந்த 2013 முதல் 2017-ம் ஆண்டு வரை ஏர் இந்தியா விமானம் மூலம் வெளிநாடு பயணம் செய்ததில் ஏற்பட்ட செலவுகள், அதற்காக அந்நிறுவனத்துக்கு அரசு வழங்கிய தொகை, செலுத்த வேண்டிய நிலுவை தொகை, செலவு ரசீதுகள், ஒட்டுமொத்த செலவு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு இருந்தார்.
ஆனால், மத்திய வெளியுறவு அமைச்சகம் முழுமையான தகவல்களை அளிக்கவில்லை. இந்த தகவலை வெளியிட்டால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மத்திய தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூரிடம் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பிரதமர் அலுவலகம் செலுத்த வேண்டிய தொகை எதுவும் உள்ளதா?...









