செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள்- திருமாவளவன்

அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தோல்வியடைய செய்வார்கள்- திருமாவளவன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,  பாராளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக- அதிமுக கூட்டணி தொடரும் என்று அரசு விழா என்று கூட பாராமல் துணை முதல்வர் அறிவிப்புச் செய்து இருக்கிறார். அதை முதல்வரும் ஆமோதித்து இருக்கிறார். இந்தக் கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். பாராளுமன்றத் தேர்தலில் எப்படி இந்த கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டினார்களோ அதைப்போலவே சட்டமன்ற தேர்தலிலும் இக்கூட்டணியை மக்கள் படுதோல்வி அடைய செய்வார்கள் என்பது உறுதி. தமிழ், தமிழர் நலன், தமிழ்நாட்டின் நலன் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து எதிராக இருக்கும் ஆட்சி மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி. தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தியைத் திணிப்பது; தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகளிலெல்லாம் வடமாநிலத்தவருக்கு வழங்குவது; தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கி...
அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா?  -அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி

அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா?  -அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது, வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று கூறியிருந்தார். ஊழல் செய்த கட்சியான திமுக ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு தகுதி இல்லை என்றும் கூறினார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது; வாரிசு அரசியல் விமர்சனம் வைப்பது கண்ணடி முன் நின்று கரடி பொம்மை விலை கேட்ட நகைச்சுவை போன்று உள்ளது. அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா? திமுகவுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிப்போம். எத்தனை வித்தைகள் செய்தாலும் 2021 தேர்தலில் மக்கள் பலமான அடியை வழங்குவார்கள். தைத் திங்கள் நேரடியாக பிரச்சாரம் தொடங்குகிறேன்....
காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் – குலாம்நபி ஆசாத் கடுமையாக விமர்சனம்

காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் – குலாம்நபி ஆசாத் கடுமையாக விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பீகார் சட்டசபை தேர்தல், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. இதையடுத்து, அக்கட்சிக்குள் உட்கட்சி பூசல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக, கபில் சிபல் காங்கிரஸ் கட்சி தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தலைமையில் பெரும் மாற்றம் வேண்டும் என கடந்த ஆக்ஸ்ட் மாதம் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களில் கபில் சிபலுடன் சேர்த்து குலாம்நபி ஆசாத்தும் உள்ளடக்கம். ஆசாத்தும் சிபலுக்கு ஆதரவான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு ...
அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு

அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    அமீத்ஷாவுடன் டிரண்டிங்கில் மல்லுகட்டிய சிம்புவின் மாநாடு https://youtu.be/C0fezXz_xSA
தமிழகத்தில் வரும் 24,25ம் தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 24,25ம் தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் 23ம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, இன்றே உருவாகியுள்ளது. சென்னையிலிருந்து 1200 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஒரே சமயத்தில் அரபிக் கடலிலும் வங்கக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. மூன்று பாதைகளில் இந்த தாழ்வு மண்டலம் பிரிந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளதால், காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த இடத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்படவில்லை. இந்த நில...
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்த பிறகு, 400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களின் கனவு நனவாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதைத் தொடர்ந்து, கலந்தாய்வின் மூலம் அவர்கள் பல்வேறு கல்லூரிகளில் மருத்துவம் பயில்வதற்கான இடம் ஒதுக்கப்பட்டது. இருப்பினும், ஒரு சில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதால், அவர்கள் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்க...
சென்னை வந்தார் அமித்ஷா

சென்னை வந்தார் அமித்ஷா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அமித் ஷாவை வரவேற்றனர். இதேபோல் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சென்று அமித் ஷாவை வரவேற்றனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் அமித்ஷாவை உற்சாகமாக வர...
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் – முக ஸ்டாலின்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் – முக ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையையும், வெளிப்படுத்தும் வகையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று, சட்டப்பேரவையில் நிறைவேற்றித் தந்தும், அதனை மத்திய அரசிடம் உரிய வகையில் வலியுறுத்திச் செயல்படுத்தும் வலிமையும், அக்கறையுமற்ற அதிமுக அரசினால், அரியலூர் அனிதா தொடங்கி ஆண்டுதோறும் பல மாணவர்களின் உயிரைக் கொன்று குவித்தது நீட் எனும் கொடுவாள். அதனால்தான், திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதிமுக ஆட்சியாளர்களோ, எத்தனை உயிர்கள் போனால் எங்களுக...
இணையத்தில் வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் படங்கள்!

இணையத்தில் வைரலாகும் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் படங்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.   மு.க.ஸ்டாலின் வாரத்தில் மூன்று நாட்கள் காலை நேரத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் சைக்கிளில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.     மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.  ...