ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி
ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி
ஸ்டாலின் தான் வராரு போர்டுகளை வைத்துக் கொள்ள தேர்தல் கமிஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
தி.மு.க. எவ்வாறு தேர்தல் பணிகள், பிரசாரங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் திட்டங்களை வகுத்து கொடுத்து வருகிறது.
அதன்படி முதலில் முக்கியமான வாசகங்கள் வெளியிடப்பட்டு ஆங்காங்கே வைக்கப்பட்டன. விளம்பரமும் செய்யப்பட்டது. முதலில் ‘அ.தி.மு.க.வை புறக்கணிப்போம்’ என்ற வாசகம் வைக்கப்பட்டது.
அதன் பிறகு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரசாரம் செய்யப்பட்டு அந்த தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று பிரசாரம் செய்தார்.
மேலும் பல்வேறு வாசகங்கள் கொண்ட பேனர்களும் வைக்கப்பட்டன. அதில் ‘ஸ்டாலின்தான் வராரு, விடியல் தர போறாரு’ என்ற வாசகம் அடங்கிய ...









