செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

திருமண நிகழ்வில் நடந்த சுவாரஸ்யம்.. அமைச்சரை பாராட்டிய பாக்யராஜ்!

திருமண நிகழ்வில் நடந்த சுவாரஸ்யம்.. அமைச்சரை பாராட்டிய பாக்யராஜ்!

NEWS
நேற்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 7 ம் தேதி மதியம் ஒரு மணி இருக்கும், சென்னை புரசைவாக்கம் தனியார் திருமண மண்டபத்தின் வாசல் முன்பு வந்து நிற்கிறது அமைச்சர் ஒருவரது கார்... அது இஸ்லாமிய பிரமுகர் ஒருவரது குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. வந்தவர் யாரென அனைவரும் பாக்கிறார்கள்.... காரில் இருந்து இறங்கியவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பதை பார்த்ததும் மேடையில் பாடிக்கொண்டிருந்த இசைக் கலைஞர்கள் அப்போதே முடிவுக்கு வந்துவிட்டனர்,இனிமேல் நமக்கு வேலைக்காகாது அவரே பாடி விடுவார் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டது அவர்களை அறியாமல் மைக்கில் லேசாக ஒலித்தது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். மற்றபடி அவருக்கு பாடும் நோக்கம் எதுவுமில்லை. ஆனால் இவர் ஏற்கனவே பல மேடைகளில் பாடல்களைப் பாடி மக்களை, தொண்டர்களை ரசிக்க...
ஒரே அறையில் கூட்டமாக நிற்க வைத்து நேர்க்காணல் நடத்தும் அதிமுக!

ஒரே அறையில் கூட்டமாக நிற்க வைத்து நேர்க்காணல் நடத்தும் அதிமுக!

HOME SLIDER, NEWS, politics
  அ.தி.மு.கவில் நடைபெறும் நேர்காணல் பரபரப்பு *அ.தி.மு.கவில் போட்டியிட வாய்ப்பு கோரி, 15 ஆயிரம் பணம் கட்டி விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று காலை 9 மணி முதல் நேர்காணல் நடைபெறுகிறது.* *Batch-Batch ஆக தலைமை அலுவலகமாடிக்கு அனுப்பப்படுகிறார்கள்.* *6 மாவட்டங்களுக்கு ஒரு பிரிவு அனுப்பப்படுகிறார்கள்.* *800 முதல் 1000 பேர் வரை செல்கிறார்கள்.* *இருக்கும் நாற்காவிகளில் அமர்ந்தவர்கள் போக மீதமுள்ளவர்கள் நெருக்கி அடித்து நிற்கிறார்கள்.* *அவர்கள் முன்னால், ஓ.பி.எஸ், இ.பி.எஸ், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பா.வளர்மதி, தமிழ் மகன் உசேன், முன்னாள் எம்.பி.வேணுகோபால் ஆகிய ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் தோன்றுகிறார்கள்.* *கே.பி.முனுசாமி அனனவரையும் வரவேற்று ஒரு நிமிடம் பேசுகிறார் -* *இ.பி.எஸ் 2 நிமிடம் பேசுகிறார்.* *புரட்சித் தலைவர் மற்றும் அம்மா ஆட்சியை மீண்டும் அமைக்க நாம் அனைவரும்...
ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி

ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி

HOME SLIDER, NEWS, politics
    ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி ஸ்டாலின் தான் வராரு போர்டுகளை வைத்துக் கொள்ள தேர்தல் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது. தி.மு.க. எவ்வாறு தேர்தல் பணிகள், பிரசாரங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் திட்டங்களை வகுத்து கொடுத்து வருகிறது. அதன்படி முதலில் முக்கியமான வாசகங்கள் வெளியிடப்பட்டு ஆங்காங்கே வைக்கப்பட்டன. விளம்பரமும் செய்யப்பட்டது. முதலில் ‘அ.தி.மு.க.வை புறக்கணிப்போம்’ என்ற வாசகம் வைக்கப்பட்டது. அதன் பிறகு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பிரசாரம் செய்யப்பட்டு அந்த தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று பிரசாரம் செய்தார். மேலும் பல்வேறு வாசகங்கள் கொண்ட பேனர்களும் வைக்கப்பட்டன. அதில் ‘ஸ்டாலின்தான் வராரு, விடியல் தர போறாரு’ என்ற வாசகம் அடங்கிய ...
வாழ்த்து மலர்கள்,வெற்றி மாலையாகட்டும் – ஸ்டாலின் கடிதம்

வாழ்த்து மலர்கள்,வெற்றி மாலையாகட்டும் – ஸ்டாலின் கடிதம்

HOME SLIDER, NEWS, politics
  வாழ்த்து மலர்கள்,வெற்றி மாலையாகட்டும்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மக்கள் பேரியக்கத்தின் தலைவர் எனும் பெரும்பொறுப்பைச் சுமந்திருக்கும் நான், உங்களைப் போன்ற உடன்பிறப்புகள் வழங்கிடும் ஊக்கத்தாலும் உணர்வுமிக்க ஒத்துழைப்பாலும் ஓய்வு பற்றி நினைக்காமல் களப்பணியே கண்ணான பணியென்று, கடிகாரம் ஓடும்முன் ஓடி, கழகத்தின் வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். கடும்பாதை - நெடும்பயணம் இதுதான் தேர்தல் களம் என்பதை அறிவேன். உறுதி குலையாத பயணத்தில் களைப்பு தோன்றாதபடி ஊக்கமும் உத்வேகமும் அளிக்கின்ற வகையில், மார்ச் 1-ஆம் நாள் என்னுடைய பிறந்தநாளில் உங்களிடமிருந்து குவிந்த இதயபூர்வமான வாழ்த்துகள் மனதிற்கு இதமளிக்கின்றன. இன்று, நேற்றல்ல… இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் பொழுதிலிருந...
இன்று தொடங்கும் திமுக நேர்க்காணல்… வேகமெடுக்கும் திமுக… பதட்டத்தில் அதிமுக!

இன்று தொடங்கும் திமுக நேர்க்காணல்… வேகமெடுக்கும் திமுக… பதட்டத்தில் அதிமுக!

HOME SLIDER, NEWS, politics
  இன்று தொடங்கும் திமுக நேர்க்காணல்... 9ம் தேதி வேட்பாளர் அறிவிப்பா? வேகமெடுக்கும் திமுக... பதட்டத்தில் அதிமுக! தமிழக தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது. விருப்ப மனு அறிவிப்பில் முந்திக் கொண்ட திமுக நேர்க்காணலிலும் முந்திக் கொண்டது. இன்று தொடங்கி 6ம் தேதிவரை நேர்க்காணல் நடத்த திமுக திட்டம். 7ம் தேதி பிரமாண்டமான பொதுக் கூட்டம் நடத்தி முடித்து 9ம் தேதி வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே விடியலைத் தேடி, மக்கள் கிராம சபை, அதிமுகவை நிராகரிக்கிறோம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல பெயர்களில் தமிழகம் முழுதும் பல கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த திருப்தியில் இருக்கிறது திமுக. திமுகவின் அதிரடிகள் கண்டு ஆளும் கட்சி பதட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஏற்கனவ...
விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு!

விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு! ஆளும் கட்சியின் முறைகேடுகள், அராஜகம் ஆகியவற்றைக் கண்டித்து திருப்பதி மற்றும் சித்தூர் ஆகிய ஊர்களில் போராட்டம் நடத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார். தெலுங்கு தேசம் கட்சியின் போராட்டம் முடிவிற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக விஜயவாடாவில் இருந்து விமானத்தில் திருப்பதிக்கு வந்த சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் இருந்து வெளியேற அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும் அவரை அதே விமானத்தில் விஜயவாடா திருப்பி அனுப்பி வைக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து சந்திரபாபு நாயுடு தற்போது திருப்பதி விமான நிலையத்தில் போராட்டம் நடத்தினார். அவரை சமாதானப்படுத்தி திருப்பி அனுப...
தேர்தல் தேதி அறிவித்ததும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்  – தேர்தல் ஆணையம் –

தேர்தல் தேதி அறிவித்ததும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் – தேர்தல் ஆணையம் –

HOME SLIDER, NEWS, politics
  தேர்தல் தேதி அறிவித்ததும் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் - தேர்தல் ஆணையம் தலைமைச் செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு அளித்த சிறப்பு பேட்டி: *தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக நடைமுறைக்கு அமுல்படுத்தப்படும். சட்டப்பேரவை நடத்த எந்த தடையும் இல்லை. ஆனால் அரசு எந்தவித புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது.* *தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்த அனைத்து கட்சிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன. அதன்பேரில்,சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்த ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. தற்போது துணை ராணுவம் 45 கம்பெனி படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.* *தமிழம் முழுவதும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். ஒரு வாக்குச் சாவடி மையத்திற்கு ஆயிரம் ...
12,000 படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு; அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாடு!

12,000 படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு; அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாடு!

NEWS
உலகமே கொரோனா பாதிப்பால் அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. இந்த நேரத்தில் பல்வேறு நிறுவனங்களில் ஊதியக் குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் தங்கள் எதிர்காலத்தை இழந்து நிற்பவர்கள் ஏராளம். இவர்களுக்கே இந்த நிலை என்றால் பெரும் கனவோடு, படித்து முடித்து வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் இளைஞர்கள் பலர் இன்று விரக்தியின் விழும்பில் நின்று எதிர்காலம் என்னவாகும் என்பதற்கு விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மக்கள் நலனை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு,அரசியல் கடந்து அனைவருக்கும் பொதுவான மனிதராக வலம் வரும் அமைச்சர் ஜெயக்குமார் புதிய முயற்சியை துவக்கியிருக்கிறார். அவரது சீரிய முயற்சியால் இதோ உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. ஆம் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதற்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார...
2020-21ல் தமிழகத்தின் கடன் ரூ. 50,000 கோடி!

2020-21ல் தமிழகத்தின் கடன் ரூ. 50,000 கோடி!

HOME SLIDER, NEWS, politics
2020-21ல் தமிழகத்தின் கடன் ரூ. 50,000 கோடியைத் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2020- 21 ஆம் நிதியாண்டிற்கான தமிழகத்தின் சந்தை கடன் 50 ஆயிரம் கோடியை தொட்டுள்ளது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 107% அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு ஒருபுறம் குறைந்த வருவாய் வசூல் மற்றும் மறுபுறம் செலவினங்களை அதிகரித்துள்ளது, இது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சவாலான சூழ்நிலையை உருவாக்கியது. இதனால் அனைத்து மாநிலங்களும் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன. மகாராஷ்டிராவிற்க்கு அடுத்தபடியாக அதிக அளவில் கடன் வாங்கிய பட்டியலில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது, தமிழகத்தை அடுத்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது....
நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் – விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை  

நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் – விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை  

HOME SLIDER, NEWS, politics
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் - விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி வடமாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று நாளை எட்டி உள்ளது. இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை 40லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என  மத்திய அரசுக்கு விவசாயிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம்   92-வது நாளாக இன்றும் தொடர்கிறது. விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த  மத்திய அரசு இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்பட...