
அ.தி.மு.கவில் நடைபெறும் நேர்காணல் பரபரப்பு
*அ.தி.மு.கவில் போட்டியிட வாய்ப்பு கோரி, 15 ஆயிரம் பணம் கட்டி விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று காலை 9 மணி முதல் நேர்காணல் நடைபெறுகிறது.*
*Batch-Batch ஆக தலைமை அலுவலகமாடிக்கு அனுப்பப்படுகிறார்கள்.*
*6 மாவட்டங்களுக்கு ஒரு பிரிவு அனுப்பப்படுகிறார்கள்.*
*800 முதல் 1000 பேர் வரை செல்கிறார்கள்.*
*இருக்கும் நாற்காவிகளில் அமர்ந்தவர்கள் போக மீதமுள்ளவர்கள் நெருக்கி அடித்து நிற்கிறார்கள்.*
*அவர்கள் முன்னால், ஓ.பி.எஸ், இ.பி.எஸ், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பா.வளர்மதி, தமிழ் மகன் உசேன், முன்னாள் எம்.பி.வேணுகோபால் ஆகிய ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் தோன்றுகிறார்கள்.*
*கே.பி.முனுசாமி அனனவரையும் வரவேற்று ஒரு நிமிடம் பேசுகிறார் -*
*இ.பி.எஸ் 2 நிமிடம் பேசுகிறார்.*
*புரட்சித் தலைவர் மற்றும் அம்மா ஆட்சியை மீண்டும் அமைக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார்.*
*இறுதியாக பேசும் ஒ.பி.எஸ்சும் 2 நிமிடம் பேசுகிறார்.*
*விருப்ப மனு அளித்த ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்திக்கத்தான் விருப்பம்.*
*ஆனால் நேர மின்மை காரணமாக முடியாததற்கு வருந்து கிறோம்.*
*ஒரு தொகுதிக்கு பலர் மனு அளித்திருந்தாலும், ஒருவருக்கு தான் வாப்பளிக்க முடியும்.*
*எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கனியை அம்மாவின் பாதங்களில் சமர்ப்பிப்போம் என்கிறார்.*
*ஓ.பி.எஸ் 2 நிமிடம் பேசி முடித்ததும், 7 பேரும் ஒன்றாக அறைக்குள் சென்று விடுகிறார்கள்.*
*சீட் கிடைக்க வில்லை என்றாலும் தங்கள் குறைகளை மனுவாக எடுத்து வந்தவர்கள் அதைக் கூட தலைவர்களிடம் கொடுக்க முடியாதபடி தலைமைக் கழக நிர்வாகிகள், 1000 பேரையும் அப்படியே பின் வாசல் வழியாக கீழே இறக்கி விடுகிறார்கள்.*
*அதன் பின் அடுத்த 6 மாவட்ட கேப்பாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்.*
*அ.தி.மு.க அலுவலகத்தில் தமாஷா நேர்காணல் நடப்பதாக சென்று வந்தவர்கள் கூறுகிறார்கள்.*
