வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

அன்பிற்கினியாள் – கோடங்கி விமர்சனம்

 

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ரீமேக் ஆகி வந்துள்ள அன்பிற்கினியாள் தமிழில் புது கான்செப்ட்.

மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த படம் ஹெலன்.

இந்த படத்தை தமிழில் அன்பிற்கினியாள் ஆக மாறியுள்ளது. அப்பா – மகள் பாச கதை எந்த மொழிக்கும் பொருந்தக் கூடியது.

அதைப் போல ஒரிஜனல் ஹெலன் திரைக்கதைக்கு எந்த சேதமும் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கோகுல்.

 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய், காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்திற்காக பெருசாக எதையும் மெனக்கெடவில்லை.

அதே நேரம் ஒரிஜினல் கதையில் இருந்த விறுவிறுப்பை கொஞ்சமும் குறையாமல் கொடுத்திருக்கிறார் கோகுல்.

ரீல் அப்பா-மகள் கதையாக இல்லாமல் இது ரியல் அப்பா அருண்பாண்டியன், மகள் கீர்த்தி பாண்டியன் இந்த படத்திலும் அப்பா மகளாக நடித்திருக்கிறார்கள்.

கதைப்படி அப்பா அருண்பாண்டியன், எல்ஐசி ஏஜன்டாக இருப்பவர். மகள் கீர்த்தி பாண்டியன், கனடாவுக்குச் சென்று நர்ஸ் வேலை செய்து, அப்பாவின் கடனை அடைக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். அதற்காக பணம் சேர்க்க ஒரு மாலில் உள்ள ரெஸ்டாரென்டில் வேலை செய்கிறார். இந்த சூழலில் கனடாவுக்குச் செல்ல IELTS தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வேலையும் உறுதியாகிறது. இதற்கிடையில் ஒரு காதல் முளைக்கிறது. இந்நிலையில் ஒரு நாள் ரெஸ்டாரென்டில் சிக்கன்களை வைக்கும் ப்ரீசர் (குளிர்பதன அறை) ரூமில் தவறுதலாக மாட்டிக் கொள்கிறார்.

மகளைக் காணாமல் அப்பா அருண்பாண்டியன் தேடுகிறார்.

இன்னொரு பக்கம் போலீசும், காதலனும் காணாமல் போன கீர்த்தியைத் தேட ஆரம்பிக்கிறார்கள்.

கீர்த்தி கிடைத்தாரா? அந்த குளிர்பதன அறையில் சிக்கிய கீர்த்தி தப்பித்தாரா? இதுதான் அன்பிற்கினியாள்.

முதல் பாதியை விட பின்பாதி விறுவிறுப்பு அதிகம்.

பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த அருண் பாண்டியன் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கோ என எண்ணத்தை ஏற்படுத்துகிறார். ரியல் மகள் என்பதால் அப்பா – மகள் பாசம் ஒரிஜினலாக இருக்கிறது.

 

கீர்த்தி பாண்டியன் இதற்கு முன் தும்பா என்ற படத்தில் நடித்திருந்தார். அதில் கிடைத்ததை விட இந்த படத்தில் கீர்த்திக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்தி கொண்டு தன் பெயரை தக்க வைத்துக் கொள்கிறார்.

அப்பாவிடம் பாசத்தைக் காட்டுவதிலும், காதலனுடன் செல்லச் சண்டை போட்டு ரொமன்ஸ் செய்வதிலும், உடலை உறைய வைக்கும் குளிர் அறையில் சிக்கித் தவிப்பதிலும் கீர்த்தி ஸ்கோர் வாங்குகிறார்.

ஜாவித் ரியாஸ். இசையும் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

ப்ரீசர் அறைக்குள்தான் பெரும்பாலான காட்சிகள் என்பதால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டாமல் ஆர்ட் டைரக்டர் ஜெயசந்திரனும், அதை படமாக்கிய ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்கள்.

ஒட்டு மொத்தத்தில் அன்பிற்கினியாள் ரசனைக்குரியவள்!

மதிப்பீடு 3/5

– கோடங்கி

644 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன