தியேட்டர் சீட் 100% புக் ஆகனுமா இத செய்தா போதும் ஐடியா தரும் மூத்த பத்திரிகையாளர்!
கொரோனாவிடமிருந்து திரையரங்குகளை காப்பது எப்படி? புதுமையான யோசனை, பரிசீலிக்குமா அரசு?
இப்படி ஒரு ஐடியாவ சொல்லி அறிக்கை வெளியிட்டு இருப்பது மூத்த பத்திரிகையாளர் நவநீதன்.
அவர் என்ன சொல்லியிருக்கார்னு பாருங்களேன்...
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு செய்தி துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் அவர்களின் கவனத்திற்கு:
கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திரைப்பட தொழில், குறிப்பாக திரையரங்குகள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
தமிழகத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், திரையரங்குகள் விரைவில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 50 சதவீதத்திற்கு மேல் பார்வையாளர்களை அரசு அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியே. மேலும், மூன்றாம் அலை விரைவில் தாக்கும் என்றும...









