செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது – 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை!

நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது – 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது - 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை! சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்.17) அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாலை 4 மணியளவில் விருகம்பாக்கத்தில் இருந்து, மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு அவரது உடல், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும்,...
உலகம் முழுவதும் திடீரென முடங்கிய டுவிட்டர்!

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய டுவிட்டர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலகம் முழுவதும் திடீரென முடங்கிய டுவிட்டர்! பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் இன்று காலை முதலே பிரச்சனை ஏற்பட்டது. டுவீட்களை போஸ்ட் செய்வதிலும் டைம்லைன் தகவல்களைப் பார்ப்பதிலும் பயனாளர்கள் நுழைவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சர்வர் செயலிழப்பு காரணமாக பல்லாயிரக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். டுவிட்டர் இணையத்தில் தகவல்களை போஸ்ட் செய்தால் 'ஏதோ தவறு நடந்துவிட்டது அல்லது  மீண்டும் முயற்சிக்கவும் டுவீட் இப்போது ஏற்றப்படவில்லை என தகவல்கள் வந்தது. டுவிட்டர் பாதிப்பு குறித்து பயனர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த டுவிட்டர் நிர்வாகம், டுவிட்டரில் தகவல்களை போஸ்ட் செய்வதில் பிரச்சினை உள்ளது. இதனை நாங்கள் சரி செய்து வருகிறோம். நீங்கள் உங்கள் டுவிட்டர் கணக்கை விரைவில் பயன்படுத்த முடியும்’ என தெரிவித்தது. இந்நிலையில் மாலை 6 மணியளவில் டுவிட்டர் உலகளவில் மு...
மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க முடியாது – நீதிபதிகள்

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க முடியாது – நீதிபதிகள்

HOME SLIDER, NEWS
மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க முடியாது - நீதிபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் பாரம்பரியமாக நடைபெறும் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மதுரை சித்திரை திருவிழாவை காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே கோவிலுக்குள் ஆடி வீதியில் நடத்தப்படும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியை கோவிலுக்கு வெளியே உள்ள சித்திரை வீதியில் நடத்த உத்தரவிட வேண்டும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கான ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், “இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் சித்திரை திருவிழாவின்போது உரிய வழிமுறைகள் வகு...
விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை – மருத்துவமனை அறிக்கை!

விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை – மருத்துவமனை அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை - மருத்துவமனை அறிக்கை! தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “நடிகர் விவேக், இன்று காலை 11 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு...
அமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் !

அமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் !

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் ! இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி, அம்பேத்கரின் பிறந்த நாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. உலகமெங்கும் உள்ள இளம் தலைவர்கள், சமத்துவத்துக்கான அவரது பார்வையால் ஈர்க்கப்படலாம் என்பதற்காக அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளி எம்.பி.யான ரோகன்னா அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த தீர்மானத்தை அவர் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்த பின்னர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “உலகமெங்கும் உள்ள இளம் தலைவர்கள் அம்பேத்கரின் புத்தகங்களை வாசிப்பார்கள், சமத்துவத்துக்கான அவரது பார்வையால் ஈர்க்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் பி.ஆர். அம்பேத்கரை கவுரவிக்கும் எனது தீர்மானத்தை மறுஅறிமுகம் செய்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்...
ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து! இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், ‘99 சாங்ஸ்’ படத்தின் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதர...
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....
ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்!

ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்! பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’ போன்ற ஆந்தாலஜி படங்களிலும் நடித்து பிரபலமானார். இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இப்படத்தை வினில் வர்கீஸ் இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நமீதா பிரமோத் நடிக்கிறார். இப்படத்திற்கு மலையாளத்தில் ‘ரஜினி’ என பெயர் வைத்துள்ளனர். ஆனால் தமிழ் தலைப்பை வெளியிடவில்லை. இப்படத்தில் காளிதாஸ், ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளதால் படத்திற்கு ரஜினி என தலைப்பு வைத்துள்ளார்களாம். தமிழில் ஏற்கனவே ரஜினி என்ற பெயரில் ஒர...
தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்!

தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்! தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கியது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு இருந்து வந்தநிலையில் இந்த மாதம் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மதக்கூட்டங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள், பஸ்களில் நின்று பயணம் செய்ய...
தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு!

தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், தனுஷின் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் டொவினோ தாமசும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ‘கள’ என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பில், கலந்துகொண்ட டொவினோ தாமஸ், சண்டைக்காட்சியில் நடிக்கும்போது விபத்தில் சிக்கினார். இதில் அவரது வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பிறகு ஆபரேஷன் செய்து, காயம் குணமாகி தற்போது படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....