செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை!

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை! கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு , இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.தற்போது தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகத்தால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- படைகள் பின்வாங்கினாலும் இந்தியா-சீனா எல்லை பதற்றங்கள் அதிகமாகவே இருக்கின்றன. எல்லை மோதலை அமெரிக்கா நெருக்கமாகப் கண்காணித்து சீனாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டித்துள்ளது. இந்தியா கோரிய சில ராணுவ தளவாடங்களையும் வழங்கி உள்ளது. இந்தியாவுக்க...
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு! சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோவுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டு இருந்த  நிலையில், டெல்லியில் மத்திய கல்வித்துறை மந்திரி  மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பிறகு, மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா 2-வது அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. வரும் 4ந் தேதி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. வரும் 4ந் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க இருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக...
கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்!

கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்! கோவையில் ஓட்டலில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, இரவு 11 மணியை தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில் 10.30 மணிக்கு முன்னதாகவே போலீசார் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரை தாக்கியது சாத்தான்குளம் படுகொலைகளை நினைவு படுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது, அரசு நிர்வாகத்தின் கடமை என குறிப்பிட்டுள்ளார். இதேபோல கோவை எம்.பி. நடராஜன் உள்ளிட்டோரும் சப்-இன்ஸ்பெக்டருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அவர் கூறுகையில் பெண்கள், குழந்தைகள் மேல் நடத்தப்பட்ட தடியடி கண்டிக்க கூடியது. தற்போது சப்-இன்ஸ்பெக்டர் வேறுதுறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது கண் துடைப்பு போல் உள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய போலீஸ் க...
ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8ல் உண்ணாவிரதம்!

ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8ல் உண்ணாவிரதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம்!   தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவிப்பு! "ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம் நடைபெறும்” என தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது. தெய்வத் தமிழ்ப் பேரவையின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று (13.04.2021) காலை சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதன்பின் ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது. தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா *பெ. மணியரசன்* அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், சித்தர் மூங்கிலடியார் (பதிணென்சித்தர் கருவூறார் சித்தர் பீடம்), குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி, இராசயோக சித்தர் பீடம...
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்!

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்! தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. இதுவரை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 8 லட்சத்து 80 ஆயிரத்து 910 பேர் குணமடைந்து உள்ளனர். 46 ஆயிரத்து 308 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் கொரோனா தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த 2 வாரமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளி விடாதது போன்ற காரணங்களால் சென்னையில் கொரோனா தாக்கம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். மற்றவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனை...
புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா பொறுப்பேற்றார்..!

புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா பொறுப்பேற்றார்..!

HOME SLIDER, NEWS, politics
    புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா பொறுப்பேற்றார்..! இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுனில் அரோரா இருந்து வருகிறார். அவருடைய பதவி காலம் நாளை முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதற்கான நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சுஷில் சந்திரா தற்போது தேர்தல் கமி‌ஷனர் பதவியில் இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தேர்தல் கமி‌ஷனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இந்த பணியில் இருந்து வந்த நிலையில் இப்போது தலைமை தேர்தல் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடைய பதவிக்காலம் 2022 மே 14-ந் தேதிவரை உள்ளது. அதுவரை அவர் இந்த பதவியில் நீடிப்பார். இந்த காலகட்டத்த...
தனி ஆளாக தர்ணா போராட்டம் மம்தாவின் அதிரடியால் ஆடிப்போன பாஜக!

தனி ஆளாக தர்ணா போராட்டம் மம்தாவின் அதிரடியால் ஆடிப்போன பாஜக!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தனி ஆளாக உண்ணாவிரத போராட்டம் மம்தாவின் அதிரடியால் ஆடிப்போன பாஜக! மேற்கு வங்காள மாநில தேர்தலில் பல இடங்களில் வன்முறைகள் நடந்தன. கூச்பெகார் பகுதியில் நடந்த மோதலில் மத்தியபடை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இது அந்த மாநிலத்தில் பெரும் விவகாரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்காள முதல்-மந்தரி மம்தா பானர்ஜி மத்திய படைகள் மீது ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். மத்திய படையினர் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், அவ்வாறு யாராவது நடந்தால் அவர்களை முற்றுகையிடுங்கள் என்றும் கூறியிருந்தார். இதனால்தான் மத்திய படையினரை திரிணாமுல் காங்கிரசார் முற்றுகையிட்டதாகவும், அது மோதலாக மாறி துப்பாக்கி சூட்டில் முடிந்ததாகவும் பாரதிய ஜனதாவினர் குற்றம் சாட்டினர். மேலும் ஒரு கூட்டத்தில் பேசும்போது மம்தா பானர்ஜி மத ரீதியாக கருத்துக்களை தெரிவித...
திருச்செந்தூர் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள் அமல்..!

திருச்செந்தூர் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள் அமல்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருச்செந்தூர் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள் அமல் : முதியவர்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது கரோனா பரவலையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்படுகிறது. இதற்கிடையே கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ...
கோயம்பேடு மார்க்கெட்டில் சுழற்சி முறையில் சில்லரை கடைகள் திறப்பு!

கோயம்பேடு மார்க்கெட்டில் சுழற்சி முறையில் சில்லரை கடைகள் திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்டில் சுழற்சி முறையில் சில்லரை கடைகள் திறப்பு! சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தம் 1800 சிறு மொத்த விற்பனை கடைகள் உள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்க்கெட்டில் கடந்த 10-ந் தேதி முதல் சிறு மொத்த விற்பனை கடைகள் செயல்பட அனுமதி கிடையாது என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒட்டு மொத்தமாக கடைகள் மூடப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று சிறு மொத்த வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த 9-ந்தேதி அங்காடி நிர்வாக குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் உடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்காடி நிர்வாக குழு சார்பில் வியாபாரிகளுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் சுழற்சி முறையில் 50 சதவீதம் சில்...
ராஜஸ்தானில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க முடிவு!

ராஜஸ்தானில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க முடிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராஜஸ்தானில் 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க முடிவு! இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் இறுதித்தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான மாநில அரசுகள் பள்ளி மாணவ-மாணவிகளை இறுதித்தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தன. இதனால் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அடுத்த வகுப்புக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால், ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வந்தன. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்தது. இதனால் பள்ளிகள் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது கொரோனா 2-ம் கட்ட அலை பரவி வருகிறது. இந்த முறை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. இதை கருத்தில் ...