வரன்தேடுபவர்களை குறிவைத்து திருமணம்- 50 வாலிபர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த மோசடி கும்பல்!
வரன்தேடுபவர்களை குறிவைத்து திருமணம்- 50 வாலிபர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த மோசடி கும்பல்!
சேலத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார்.
அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அந்த எண்ணை தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசிய நபர்கள், தங்களது பெயர் சுனில், கார்த்திகேயன் என்றும், புரோக்கர்களாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் தங்களிடம் 24 வயது இளம்பெண் இருப்பதாகவும், பெண் பார்க்க கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறைக்கு வருமாறு கூறினர். மணிகண்டனும் அங்கு சென்றார்.
அப்போது புரோக்கர்கள் சபிதா(24) என்ற பெண்ணை காண்பித்து பிடித்திருக்கிறதா? என கேட்டனர். மணிகண்டனும் பெண் பிடித்திருக்கிறது என கூறவே, அவர்கள் உடனே திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து 2 பேருக்கும் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். மேலும் அவரி...









