இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை!
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை!
கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு , இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.தற்போது தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகத்தால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
படைகள் பின்வாங்கினாலும் இந்தியா-சீனா எல்லை பதற்றங்கள் அதிகமாகவே இருக்கின்றன. எல்லை மோதலை அமெரிக்கா நெருக்கமாகப் கண்காணித்து சீனாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டித்துள்ளது. இந்தியா கோரிய சில ராணுவ தளவாடங்களையும் வழங்கி உள்ளது.
இந்தியாவுக்க...









