ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

அமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் !

அமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் !

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்க பாராளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் ! இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி, அம்பேத்கரின் பிறந்த நாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. உலகமெங்கும் உள்ள இளம் தலைவர்கள், சமத்துவத்துக்கான அவரது பார்வையால் ஈர்க்கப்படலாம் என்பதற்காக அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளி எம்.பி.யான ரோகன்னா அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த தீர்மானத்தை அவர் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்த பின்னர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “உலகமெங்கும் உள்ள இளம் தலைவர்கள் அம்பேத்கரின் புத்தகங்களை வாசிப்பார்கள், சமத்துவத்துக்கான அவரது பார்வையால் ஈர்க்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் பி.ஆர். அம்பேத்கரை கவுரவிக்கும் எனது தீர்மானத்தை மறுஅறிமுகம் செய்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்...
ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து! இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், ‘99 சாங்ஸ்’ படத்தின் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதர...
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....
ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்!

ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்! பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’ போன்ற ஆந்தாலஜி படங்களிலும் நடித்து பிரபலமானார். இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இப்படத்தை வினில் வர்கீஸ் இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நமீதா பிரமோத் நடிக்கிறார். இப்படத்திற்கு மலையாளத்தில் ‘ரஜினி’ என பெயர் வைத்துள்ளனர். ஆனால் தமிழ் தலைப்பை வெளியிடவில்லை. இப்படத்தில் காளிதாஸ், ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளதால் படத்திற்கு ரஜினி என தலைப்பு வைத்துள்ளார்களாம். தமிழில் ஏற்கனவே ரஜினி என்ற பெயரில் ஒர...
தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்!

தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை- மேலும் கட்டுப்பாடுகளை கொண்டுவர திட்டம்! தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கியது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு இருந்து வந்தநிலையில் இந்த மாதம் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மதக்கூட்டங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள், பஸ்களில் நின்று பயணம் செய்ய...
தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு!

தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், தனுஷின் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் டொவினோ தாமசும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ‘கள’ என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பில், கலந்துகொண்ட டொவினோ தாமஸ், சண்டைக்காட்சியில் நடிக்கும்போது விபத்தில் சிக்கினார். இதில் அவரது வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பிறகு ஆபரேஷன் செய்து, காயம் குணமாகி தற்போது படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை!

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை! கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு , இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.தற்போது தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகத்தால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- படைகள் பின்வாங்கினாலும் இந்தியா-சீனா எல்லை பதற்றங்கள் அதிகமாகவே இருக்கின்றன. எல்லை மோதலை அமெரிக்கா நெருக்கமாகப் கண்காணித்து சீனாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டித்துள்ளது. இந்தியா கோரிய சில ராணுவ தளவாடங்களையும் வழங்கி உள்ளது. இந்தியாவுக்க...
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு! சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோவுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டு இருந்த  நிலையில், டெல்லியில் மத்திய கல்வித்துறை மந்திரி  மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகலில் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பிறகு, மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா 2-வது அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. வரும் 4ந் தேதி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. வரும் 4ந் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க இருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக...
கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்!

கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்! கோவையில் ஓட்டலில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, இரவு 11 மணியை தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில் 10.30 மணிக்கு முன்னதாகவே போலீசார் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரை தாக்கியது சாத்தான்குளம் படுகொலைகளை நினைவு படுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது, அரசு நிர்வாகத்தின் கடமை என குறிப்பிட்டுள்ளார். இதேபோல கோவை எம்.பி. நடராஜன் உள்ளிட்டோரும் சப்-இன்ஸ்பெக்டருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அவர் கூறுகையில் பெண்கள், குழந்தைகள் மேல் நடத்தப்பட்ட தடியடி கண்டிக்க கூடியது. தற்போது சப்-இன்ஸ்பெக்டர் வேறுதுறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது கண் துடைப்பு போல் உள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய போலீஸ் க...
ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8ல் உண்ணாவிரதம்!

ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8ல் உண்ணாவிரதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம்!   தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவிப்பு! "ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம் நடைபெறும்” என தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது. தெய்வத் தமிழ்ப் பேரவையின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று (13.04.2021) காலை சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதன்பின் ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது. தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா *பெ. மணியரசன்* அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், சித்தர் மூங்கிலடியார் (பதிணென்சித்தர் கருவூறார் சித்தர் பீடம்), குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி, இராசயோக சித்தர் பீடம...