ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

‘விவிபேட்’ எந்திரங்களை எடுத்துச்சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்..!

‘விவிபேட்’ எந்திரங்களை எடுத்துச்சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்..!

HOME SLIDER, NEWS, politics
‘விவிபேட்’ எந்திரங்களை எடுத்துச்சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்! ‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய என்ஜினீயர் மற்றும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் என 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை வேளச்சேரி டான்சி நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 3 ‘விவிபேட்’ எந்திரங்களை 2 பேர் மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அவர்களை மோட்டார் சைக்கிளுடன் சிறைபிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விரைந்து வந்து 2 பேரிடமும் விசாரித்தனர். இதற்கிடையில் அங்கு வந்த வேளச்சேரி போலீசார், ‘விவிபேட்’ எந்திர...
முதல் ஆளாக வாக்களித்தேன்… விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை – சமுத்திரகனி!

முதல் ஆளாக வாக்களித்தேன்… விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை – சமுத்திரகனி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
முதல் ஆளாக வாக்களித்தேன்... விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை - சமுத்திரகனி! தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. திரையுலகினர் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதேசமயம் பல முக்கிய திரைப்பிரபலங்கள் ஓட்டளிக்கவில்லை என தகவல் பரவியது. அதில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. படங்களில் சமூக கருத்துக்களை கூறும் சமுத்திரகனி ஓட்டு போடவில்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், அவர் ஓட்டு போட்ட விரல் ‘மை’ அடையாளத்துடன் புகைப்படம் வெளியிட்டு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், அதில் கூறியதாவது: “நானும், என் மனைவியும் காலை 6.55 மணிக்கே வாக்குச்சாவடிக்கு சென்றுவிட்டோம். ஆனால் ஓட்டுப் பதிவு செய்யும் இயந்திரத்தில் சிறு கோளாறு ஏற்பட்டதால், அதை சரிசெய்ய 40 நிமிடம் ஆனது. பி...
தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு!

தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா பாதிப்பு! இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அமீர் கான், மாதவன், அக்‌ஷய் குமார், ஆலியா பட், கத்ரீனா கைப் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகை நக்மாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறாராம் நக்மா. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....
கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை!

கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா அதிகரிப்பு எதிரொலி- இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை! இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வரும் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி நியூசிலாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏப்.11 முதல் 28 வரை இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் நியூசிலாந்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா ஓய்வு!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா ஓய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா ஓய்வு. தமிழக முதல்வராக 1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமான ரூ 66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக திமுக தொடர்ந்த வழக்கு  பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தனிநீபதியாக நீதிபதி குன்ஹா நியமிக்கப்பட்டார். அவர் ஜெயலலிதா வழக்கை  2003ம் ஆண்டு முதல்  விசாரித்து  வந்தார்.  18 ஆண்டுகால விசாரணைக்கு பிறகு,  2014-ஆம் ஆண்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.  சொத்துக்குவிப்பு வழக்கில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும்  4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பதவியில் உள்ள ஒரு முதல்வர் சிறைக்கு சென்றது இதுவே முதல் முறை ...
வாக்கு எண்ணும் மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!

வாக்கு எண்ணும் மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!

HOME SLIDER, NEWS, politics, நடிகர்கள்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான ராணிமேரி கல்லூரியில் சீலிடப்பட்ட பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறையை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தேன். வாக்காளர்களுக்கு என் அன்பும் நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்....
“அதெப்படி, கோளாறு ஏற்படும் போதெல்லாம் வாக்குகள் தாமரைக்கே செல்கின்றன ?” – ‍‍ஜோதிமணி கேள்வி

“அதெப்படி, கோளாறு ஏற்படும் போதெல்லாம் வாக்குகள் தாமரைக்கே செல்கின்றன ?” – ‍‍ஜோதிமணி கேள்வி

HOME SLIDER, NEWS, politics
“அதெப்படி, கோளாறு ஏற்படும் போதெல்லாம் வாக்குகள் தாமரைக்கே செல்கின்றன ?” – ‍‍ஜோதிமணி கேள்வி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு நிகழும்போதெல்லாம், வாக்குகள் தாமரை சின்னத்திற்கே விழுவது எப்படி? என்று கேள்வியெழுப்பியுள்ளார் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி. வாக்குப்பதிவு இயந்திரங்களில், கோளாறு நிகழும் சமயங்களில், வாக்குகள் தவறியும்கூட, எதிர்க்கட்சிகளின் சின்னங்களுக்கு விழுவதில்லையே? அனைத்து மாநிலங்களிலும் இதுதான் நிகழ்கிறது. அதற்கு என்ன காரணம்? என்றுள்ளார் அவர். ‍நேற்று, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், சில தொகுதிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், வேறு சின்னங்களுக்கு போடப்பட்ட வாக்குகள், தாமரை மற்றும் இரட்டை இலைக்கு விழுந்ததாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், இதுபோன்ற புகார்கள் வேறு மாநிலங்கள...
ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்!

ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்! தமிழ்த் திரையுலகில் வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி உள்பட பல்வேறு பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக உயர்ந்துள்ளனர். தற்போது நடிகர் சதீஷும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார். இவர் தற்போது, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கவுள்ளார். இது அவர் இயக்கும் முதல் படமாகும். பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் சென்னையிலேயே நடைபெற உள்ளது. இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்கவுள்ளார். பிரவீன் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, அஜீஷ் அசோக் இசையமைக்க உள்ளனர். இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்....
6 நாட்களுக்கு பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வகுப்பு நாளை தொடக்கம்!

6 நாட்களுக்கு பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வகுப்பு நாளை தொடக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
6 நாட்களுக்கு பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வகுப்பு நாளை தொடக்கம்!! கொரோனா தொற்று பரவல் காரணமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. மே மாதம் 3-ந் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்குள்ளாக பாடத்திட்டங்கள் நடத்தி முடித்து திருப்புதல் தேர்வுகளை நடத்துவதில் பள்ளிகள் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பொதுத் தேர்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. இதற்கிடையில் சட்டசபை தேர்தல் மற்றும் புனித வெள்ளிக்காக கடந்த வாரம் 3-ந் தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகள...
75 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை- மின்னணு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு!

75 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை- மின்னணு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
75 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை- மின்னணு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு! தமிழக சட்டசபை தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் குறைவாகும். வழக்கமாக தேர்தல்களில் மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்து விடும். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மொத்த வாக்குகள், பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டன. அந்த பணி முடிந்ததும் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. பின்னர் பலத்த பாதுகாப்பு டன் தேர்தல் ஆணையத்தின் வாகனத்தில் ஏற்றி ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 234 தொகுதிகளிலும் பதிவான வாக்க...