சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

கேன்சர் நோயாளிகளுக்கு நடிகர் மைம் கோபி செய்த மனிதநேயம்..!

கேன்சர் நோயாளிகளுக்கு நடிகர் மைம் கோபி செய்த மனிதநேயம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
மைம் நிகழ்ச்சி நடத்தி புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உதவிய நடிகர் மைம் கோபி. நடிகர் மைம் கோபி சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர். இவர் மைம் கலை , நடிப்பு பயிற்சி ஆசிரியராகவும் இருக்கிறார். மைம் கலை மூலமாக பல நிகழ்ச்சிகள் நடத்தியும் வருபவர். சென்னை எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியுடன் இணைந்து மைம் நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் நிதியை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் மைம் நிகழ்ச்சியை டான் போஸ்கோ பள்ளி கலையரங்கில் நடத்தினார்கள். நடிகர்களாக டான் போஸ்கோ பள்ளி மாணவர்களையே பயிற்சி கொடுத்து நடிக்கவும் வைத்துள்ளார். இது பற்றி மைம் கோபி கூறுகையில்… குழந்தைப்பருவத்தில் நாம் சொல்லிக்கொடுக்கும் பழக்கவழக்கங்கள்தான் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது, நல்ல பழக்கங்களும், உதவும் எண்ணமும், மனிதபிமானமும் சிறு வயதிலிருந்தே நாம் குழந்தைகளுக்கு சொ...
அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் முழு உருவ சிலையை திறந்து வைத்த சோனியா காந்தி

அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் முழு உருவ சிலையை திறந்து வைத்த சோனியா காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்ததையடுத்து,  அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு சிலை அமைக்க  முடிவு செய்யப்பட்டது. கலைஞர் முழு உருவசிலை  அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கருணாநிதியின் சிலை வடிவமைக்கப்பட்டு, அண்ணா அறிவாலயத்தில் அந்த சிலை நிறுவப்பட்டிருக்கிறது. அந்த சிலையை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்துள்ளார். அந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் உடனிருந்தனர். சோனியா காந்தி திறந்த கலைஞர் சிலை அந்த விழாவை முடித்துக் கொண்டு நேரடியாக மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற சோனியா காந்தி, அங்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். ...
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கும் மக்கள் நக்சலைட் என பிஜேபி எச்.ராஜா திமிர் பேச்சு

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கும் மக்கள் நக்சலைட் என பிஜேபி எச்.ராஜா திமிர் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பிறப்பித்துள்ள உத்தரவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.இதனையடுத்து இவ்விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட இருக்கிறது. மேலும் ஆலையை திறந்தால் போராட்டம் வெடிக்கும் என மக்கள் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை விரும்புகிறார்கள். நக்சல்தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கிறார்கள். இந்த போராட்டம் காசு கொடுத்து அர்பன் நக்சல் மூலம் நடத்தப்பட்ட போராட்டம் ஆகும். மக்கள் முன்னேற கூடாது என்று நக்சல்கள் இதை எதிர்க்கிறார்கள் என்றார்....
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி..!

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி..! சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். நாளை சென்னை வரும் சோனியா காந்தி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி..! அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழா மு...
ரபேல் விவகாரத்தில் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை  வேண்டும் – ராகுல்காந்தி

ரபேல் விவகாரத்தில் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் – ராகுல்காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.  ரபேல் விவகாரத்தில் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் - ராகுல்காந்தி இந்த பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் எம்.எல்.சர்மா,  வக்கீல் வினீத் தண்டா, ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பின், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வ...
கருணாநிதி கெட்டப்பில் பார்லிமெண்ட்டுக்குள் நுழைந்து பரபரப்பு காட்டிய  தெலுங்கு தேச எம்பி.

கருணாநிதி கெட்டப்பில் பார்லிமெண்ட்டுக்குள் நுழைந்து பரபரப்பு காட்டிய தெலுங்கு தேச எம்பி.

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தெலுங்கு தேச எம்பி நரமல்லி சிவபிரசாத் ஒவ்வொரு நாளும் மத்திய அரசை எதிர்க்கும் விதமாக நாரதர், நாட்டுப்புற கலைஞர், ஆடுமாடு மேய்ப்பவர், பரசுராமன், ஹிட்லர் என புது புது தோற்றங்களில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். கருணாநிதி கெட்டப்பில் பார்லிமெண்ட்டுக்குள் நுழைந்து பரபரப்பு காட்டிய தெலுங்கு தேச எம்பி. பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மாநிலம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக அணிகளைத் திரட்டி சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு திமுக தலைவர் ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து இதற்கான கூட்டங்களில் பங்கெடுத்து வருகிறார். இதன் காரணமாக சிவபிரசாத் கருணாநிதி கெட்டப்பில் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார். கருப்பு கண்ணாடி, ...
சீதக்காதி எல்லா தரப்பையும் பேசும் படம் -விஜய்சேதுபதி

சீதக்காதி எல்லா தரப்பையும் பேசும் படம் -விஜய்சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனக்கு இல்லை என்றாலும் உயிரையும் கொடுப்பான் சீதக்காதி என்பார்கள் அந்தளவுக்கு கொடைவள்ளல் ஆன சீதக்காதி பெயர் தாங்கி வரும் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியும் தாராள மனதுடன் இருக்கிறார். 20ம் தேதி  சீதக்காதி ரிலீசுடன் இணைந்து ரிலீஸ் ஆகும் எல்லா படஙகளும் வெற்றி பெற வேண்டும் என விழாவில் விஜய்சேதுபதி பேசியது குறிப்பிடத்தக்கது 75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இது விஜய் சேதுபதியின் 25-வது படம். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தின் இயக்குனர் பாலாஜி தரணி தரண் பேசியதாவது, இந்த படத்தை உருவாக்கும்போது நான் மிகவும் மகிழ்ந்த விஷயம் நாடக கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது தான். எல்லோரும் மிகவும் தி...
பாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது இலங்கை சுப்ரீம் கோர்ட்  அதிரடி..!

பாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது இலங்கை சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பாராளுமன்றம் கலைப்பு சட்ட விரோதமானது இலங்கை சுப்ரீம் கோர்ட் அதிரடி இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர்  சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை.  எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. அத்துடன் ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து மூன்று பிரதான கட்சிகள் உள்பட 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன. அதிபர் சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், மீண்டும் பாராளுமன்றம் செயல்படுவதற்கு உத்தரவிடவேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளன.  இந்நிலையில், இந்த வ...
ஆடம்பரமாக நடந்த இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மகள் திருமணம்..!

ஆடம்பரமாக நடந்த இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மகள் திருமணம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் மும்பையில் ஆடம்பர திருமணம் நடந்தது. இந்த திருமணம் முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட ‘அன்டிலா’ இல்லத்தில் நடந்தது. பெரிய திருமண மண்டபங்களே தோற்றுப்போகும் அளவிற்கு வண்ண விளக்குகளால் ‘அன்டிலா’ பங்களா ஜொலித்தது. மலர்கள் அலங்காரம் கண்ணை கவர்ந்தது. பங்களா அமைந்துள்ள வீதியெங்கும் தோரணங்கள் களை கட்டி இருந்தன. இஷா அம்பானி திருமணத்துக்காக அச்சடிக்கப்பட்ட ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஆன செலவு ரூ.3 லட்சம் என்றும், ரூ.722 கோடிக்கும் மேல் திருமண செலவு என்றும் கூறப்பட்ட நிலையில் வெகு ஆடம்பரத்துடன் திருமணம் நடந்து முடிந்தது.  திருமண விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், முன்னாள் மத்திய மந்திரி ...
இசையராஜா-75 நிகழ்ச்சிக்காக 2 நாள் படப்பிடிப்புக்கு விடுமுறை

இசையராஜா-75 நிகழ்ச்சிக்காக 2 நாள் படப்பிடிப்புக்கு விடுமுறை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 5-முறை தேசிய விருதுகளை பெற்று  500-க்கும் மேற்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும்  திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசையராஜா-75 என்ற பெயரில் பிரம்மாண்டமான இசைவிழாவை  நடத்த இருக்கிறார்கள் 2019-பிப்ரவரி மாதம் 2-3ம் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இசைவிழாவை  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இளையராஜாவுடன் பணிபுரிந்த இயக்குனர்கள், இசை கலைஞர்கள் பங்கு பெற்று அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்கள்.எனவே பிப்ரவரி 2-3 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு தமிழ்த் திரையுலகில் சார்ப...