வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

சீதக்காதி எல்லா தரப்பையும் பேசும் படம் -விஜய்சேதுபதி

தனக்கு இல்லை என்றாலும் உயிரையும் கொடுப்பான் சீதக்காதி என்பார்கள் அந்தளவுக்கு கொடைவள்ளல் ஆன சீதக்காதி பெயர் தாங்கி வரும் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதியும் தாராள மனதுடன் இருக்கிறார். 20ம் தேதி  சீதக்காதி ரிலீசுடன் இணைந்து ரிலீஸ் ஆகும் எல்லா படஙகளும் வெற்றி பெற வேண்டும் என விழாவில் விஜய்சேதுபதி பேசியது குறிப்பிடத்தக்கது

75 வயது நாடக கலைஞராக அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இது விஜய் சேதுபதியின் 25-வது படம். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மிக பிரமாண்டமாக வெளியிடும் இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

படத்தின் இயக்குனர் பாலாஜி தரணி தரண் பேசியதாவது,

இந்த படத்தை உருவாக்கும்போது நான் மிகவும் மகிழ்ந்த விஷயம் நாடக கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது தான். எல்லோரும் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் இந்த படத்தில் நடித்த அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த கதையை நான் எழுதி 5 வருடம் இருக்கும், கதையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கிடைத்தது மிகப்பெரிய வரம். விஜய் சேதுபதியை என்னால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்கவே இல்லை. கடைசியில் அவரிடம் தான் போய் நின்றேன். அவர் கதாபாத்திரமாகவே உருமாறி நின்றார். சீதக்காதி தான் என்னுடைய சிறந்த படம் என்று சொல்வேன்.

மௌலி, அர்ச்சனா, மகேந்திரன் ஆகியோருடன் நாடக கலைஞர்கள் அனைவரும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்கள். லைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப்பெரிய அனுபவம் என்றார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.

விஜய் சேதுபதி பேசியதாவது,

என் 25வது படமாக எதை பண்ணலாம் என எந்த ஒரு சிந்தனையும் எனக்குள் இல்லை. அந்த நேரத்தில் தான் இந்த படம் எனக்கு அமைந்தது. இந்த கதையை நம்பிய தயாரிப்பாளர்களான மும்மூர்த்திகள் சுதன், உமேஷ், ஜெயராம் ஆகியோருக்கு நன்றி. இந்த கதை அனைவரையும் ஈர்க்கும், எதிர்பாராத விஷயங்கள் இருக்கும். 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எல்லா படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார் விஜய் சேதுபதி.

இந்த சந்திப்பில் நடிகைகள் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், நடிகர் வெற்றி மணி, தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், உமேஷ், நிர்வாக தயாரிப்பாளர் ஏ குமார், சிங்க் சவுண்ட் ராகவ் ரமேஷ், ஆடை வடிவமைப்பு பிரியங்கா, ஒலிப்பதிவாளர் சுரேன், பப்ளிசிட்டி டிசைன் கோபி பிரசன்னா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

263 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன