நான் ஓய்வு எடுத்து கொள்வதற்கான நேரமிது – பிரசாந்த் கிஷோர்
நான் ஓய்வு எடுத்து கொள்வதற்கான நேரமிது - பிரசாந்த் கிஷோர்
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இவற்றில், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்க்கட்சியில் இருந்து ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ளது
இந்த இரு மாநில தேர்தல்களிலும் ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜியை வெற்றி பெற செய்வதற்கான பணிக்காக அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஈடுபடுத்தப்பட்டார்
இந்த தேர்தலில், பா.ஜ.க. 75க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், கிஷோர் அளித்துள்ள பேட்டியொன்றில், நான் தற்பொழுது மேற்கொண்டிருக்கும் பணியை தொடர விரும்பவில்லை. நிறைவாக பணியாற்றி விட்டேன். நான் ஓய்வு எடுத்து கொள்வதற்கான நேரமிது. வாழ்க்...









