ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

நான் ஓய்வு எடுத்து கொள்வதற்கான நேரமிது – பிரசாந்த் கிஷோர்

நான் ஓய்வு எடுத்து கொள்வதற்கான நேரமிது – பிரசாந்த் கிஷோர்

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.  இவற்றில், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.  தமிழக சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.  இதனால் 10 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்க்கட்சியில் இருந்து ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ளது

இந்த இரு மாநில தேர்தல்களிலும் ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜியை வெற்றி பெற செய்வதற்கான பணிக்காக அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஈடுபடுத்தப்பட்டார்

இந்த தேர்தலில், பா.ஜ.க. 75க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.  இந்நிலையில், கிஷோர் அளித்துள்ள பேட்டியொன்றில், நான் தற்பொழுது மேற்கொண்டிருக்கும் பணியை தொடர விரும்பவில்லை.  நிறைவாக பணியாற்றி விட்டேன்.  நான் ஓய்வு எடுத்து கொள்வதற்கான நேரமிது.  வாழ்க்கையில் ஏதேனும் செய்ய வேண்டும்.  அதனால் இந்த பணியில் இருந்து வெளியேற விரும்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது டுவிட்டரில் பாஜக சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்றால் தனது வேலையை துறந்து வெளியேற வேண்டும் என கிஷோர் கூறியது குறிப்பிடத்தக்கது
அரசியலில் மீண்டும் இணைவீர்களா? என்பதற்கு பதில் அளித்த கிஷோர், நான் ஒரு தோற்று போன அரசியல்வாதி.  அதனால், கடந்த காலத்திற்கு திரும்பி சென்று அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும் என கூறினார்.
அசாமுக்கு தனது குடும்பத்துடன் சென்று தேயிலை தோட்ட பணிகளை கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

288 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன