சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118- தொகுதிகள் தேவை என்ற நிலையில் 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்

இதற்கிடையே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அதிமுக கூட்டணி வெல்லாத நிலையில், முதல்வர்  பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார். சேலத்தில் இருந்து  தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ளார்

344 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன