ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து!

பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து! பள்ளி-கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர். இதன் விவரம் வருமாறு, பள்ளி மாணவி சரண்ஸ்ரீ:- பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நண்பர்கள், ஆசிரியர்களை மீண்டும் சந்திப்பதில் மனம் சந்தோஷம் அடைகிறது. நேரடி வகுப்புகள் மீண்டும் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி நிலை இனி உயரும். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு திரும்பியிருப்பது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. பள்ளி மாணவர்களான சகோதரர்கள் ஏ.ஹரி, ஏ.சிவா:- தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடத்தை மீண்டும் அடைந்திருப்பது புது அனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஆன்-லைன் வகுப்புக்கு விடை கொடுத்து, முன்புபோலவே நேரடி வகுப்பில் அமருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நேரடி வகுப்புகள் மட்டுமே பாட...
கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ஷங்கர் படம்!

கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ஷங்கர் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய ஷங்கர் படம்! தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணுடன் கூட்டணி அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ள இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளார். இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி உள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் கொண்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ள கதை தன்னுடையது என செல்லமுத்து என்ற உதவி இயக்குனர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார். இவர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறத...
கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு!

கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
கணவர் ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு! பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது. ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டி இந்நிலையில், ராஜ்குந்த்ராவுடன் தான் சேர்ந்து வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேற, நடிகை ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ராஜ் குந்த்ராவை பிரிந்து, அவர் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இல்லாமல், புது வாழ்க்கையை துவங்க நடிகை ஷில்பா ஷெட்டி விரும்புவதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டியிடம் இருந்து ...
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ. 25 உயர்வு!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ. 25 உயர்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ. 25 உயர்வு! மூன்று மாத காலத்திற்கு பின் கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயு விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதமும் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டருக்கு இன்று மீண்டும் ரூ.25 விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.875.50 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ.25 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.900.50 ஆக உயர்ந்துள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 75 அதிகரித்து 1831.50க்கு விற்கப்படுகிறது.  இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது....
அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! சென்னை அண்ணா சாலையில்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். சட்ட வல்லுநர்களை ஆலோசித்து சென்னை அண்ணா சாலையில்  ஏதாவது ஒரு இடத்தில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கூறினார். தி.க. தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் சட்டசபையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்....
போதைப்பொருள் விற்பனையாளருடன் தொடர்பு…. நடிகை சோனியா அகர்வால் கைது!

போதைப்பொருள் விற்பனையாளருடன் தொடர்பு…. நடிகை சோனியா அகர்வால் கைது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
போதைப்பொருள் விற்பனையாளருடன் தொடர்பு.... நடிகை சோனியா அகர்வால் கைது! கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடா்பாக பிரபல நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய 2 பேரையும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இதற்கிடையில், பெங்களூருவில் கடந்த 12-ந்தேதி போதைப்பொருள் விற்பனையாளரான நைஜீரியாவை சேர்ந்த தாமஸ் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட நடிகையும், மாடல் அழகியுமான சோனியா அகர்வால் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள சோனியா அகர்வாலின் வீட்டில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்து 40 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்த...
ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது!

ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது! தமிழக சட்டசபையில் இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கான சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இம்மசோதாவுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில்  ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்....
போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் தண்டனை- மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் தண்டனை- மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் தண்டனை- மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு! சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ‘தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:- இந்த அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து 29.8.2021 வரை தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோர் மீது 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 11,247 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 113 நான்கு சக்கர வாகனங்களும், 106 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ...
டோக்கியோ பாராலிம்பிக் – வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியாவுக்கு வெள்ளி பதக்கம்!

டோக்கியோ பாராலிம்பிக் – வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியாவுக்கு வெள்ளி பதக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டோக்கியோ பாராலிம்பிக் - வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியாவுக்கு வெள்ளி பதக்கம்! மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியின் 7-வது நாளான இன்று, ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்துனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பங்கேற்ற முதல் பாராலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தி உள்ளார் யோகேஷ் கத்துனியா. டோக்கியோ பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது....
டோக்கியோ பாராலிம்பிக் – ஈட்டி எறிதலில் 2 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்!

டோக்கியோ பாராலிம்பிக் – ஈட்டி எறிதலில் 2 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டோக்கியோ பாராலிம்பிக் - ஈட்டி எறிதலில் 2 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்! மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியின் 7-வது நாளான இன்று, ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர் தேவேந்திரா ஜஜாரியா வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இலங்கை வீரர் ஹெராத் தங்கப் பதக்கத்தை வென்றார். டோக்கியோ பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது....