ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து! கொரோனா பரவல் எதிரொலி!!
ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து! கொரோனா பரவல் எதிரொலி!!
கொரோனா தொற்று பரவல் எதிரொலியால் ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் 12-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது, என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதியிலும், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சிலும் ஏற்கனவே மொத்தம் 22 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. அதன் பிறகு 7 ஆயிரம் தரிசன டோக்கன்கள் குறைக்கப்பட்டு, தற்போது 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவுவதால், தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் திருப்...









