ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்த மாவட்டங்களை 3 ஆக பிரித்து ஜூன் 28-ந்தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது....
லைகா பட நிறுவனம் சார்பில் கொரானா நிவாரண நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்ட ரூ.2 கோடிக்கான காசோலை!

லைகா பட நிறுவனம் சார்பில் கொரானா நிவாரண நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்ட ரூ.2 கோடிக்கான காசோலை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  லைகா பட நிறுவனம் சார்பில் கொரானா நிவாரண நிதியாக ரூ.2 கோடிக்கான காசோலை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது! பிரபலமான பட தயாரிப்பு நிறுவனமான லைகா பட நிறுவனம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.2 கோடி அளிக்க அதன் தலைவர் சுபாஷ்கரன் முடிவு செய்தார். அதன் பேரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். அவர்களோடு, நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்....
ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! தமிழகத்தில் கடந்த மே 7-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் ஏறுமுகமாக இருந்தது. ஒருகட்டத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 36 ஆயிரத்தை தொட்டது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந்தேதியில் இருந்து 31-ந்தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்த காலகட்டத்தில் தொற்று சற்று குறைந்து முன்னேற்றம் காணப்பட்டது. எனவே தொற்றின் சங்கிலித்தொடரை அறுப்பதற்காக மீண்டும் ஒரு வாரம், அதாவது மே 31-ந்தேதியில் இருந்து ஜூன் 7-ந்தேதிவரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இந்த 2 முழு ஊரடங்கில் நல்ல பலன் கிடைத்ததைத் தொடர்ந்து 3-ம் முறையாக சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு 7-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் கொர...
டாஸ் ஜெயித்தால் பேட்டிங்கா, பந்து வீச்சா? – இந்திய அணிக்கு கங்குலி அறிவுரை!

டாஸ் ஜெயித்தால் பேட்டிங்கா, பந்து வீச்சா? – இந்திய அணிக்கு கங்குலி அறிவுரை!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
டாஸ் ஜெயித்தால் பேட்டிங்கா, பந்து வீச்சா? - இந்திய அணிக்கு கங்குலி அறிவுரை! இங்கிலாந்தின் சவுத்தம்டனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் பேட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி ஆலோசனை கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் கோப்பையை இந்திய வீரர்கள் வெல்லுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் நியூசிலாந்து அணியின் தரம் மற்றும் திறமையை கருத்தில் கொள்ளும்போது அது எளிதாக இருக்காது. இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை பார்த்தால் நாம் முத...
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு! நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமீன் அளிக்க கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தனிப்படை முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க மதுரை விரைந்துள்ளது. மற்றொரு தனிப்படையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்....
ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை! தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை அமலில் உள்ளது. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஊரடங்கு நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்....
தியேட்டர் சீட் 100% புக் ஆகனுமா இத செய்தா போதும் ஐடியா தரும் மூத்த பத்திரிகையாளர்!

தியேட்டர் சீட் 100% புக் ஆகனுமா இத செய்தா போதும் ஐடியா தரும் மூத்த பத்திரிகையாளர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கொரோனாவிடமிருந்து திரையரங்குகளை காப்பது எப்படி? புதுமையான யோசனை, பரிசீலிக்குமா அரசு? இப்படி ஒரு ஐடியாவ சொல்லி அறிக்கை வெளியிட்டு இருப்பது மூத்த பத்திரிகையாளர் நவநீதன். அவர் என்ன சொல்லியிருக்கார்னு பாருங்களேன்... மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு செய்தி துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் அவர்களின் கவனத்திற்கு: கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாம் அலைகளின் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திரைப்பட தொழில், குறிப்பாக திரையரங்குகள், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், திரையரங்குகள் விரைவில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 50 சதவீதத்திற்கு மேல் பார்வையாளர்களை அரசு அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியே. மேலும், மூன்றாம் அலை விரைவில் தாக்கும் என்றும...
‘யூ டியூப்’ சேனல் மூலமாக மாதம் ரூ.12 லட்சம் குவித்த ‘பப்ஜி’ மதன்!

‘யூ டியூப்’ சேனல் மூலமாக மாதம் ரூ.12 லட்சம் குவித்த ‘பப்ஜி’ மதன்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
‘யூ டியூப்’ சேனல் மூலமாக மாதம் ரூ.12 லட்சம் குவித்த ‘பப்ஜி’ மதன்! யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன். இவர் மதன், மதன் 18+, பப்ஜி மதன் உள்பட பல்வேறு சேனல்களை நடத்தி வந்தார். இந்த யூடியூப் சேனல்கள் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்படுவதாக சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. வடபழனியைச் சேர்ந்த அபிஷேக் ரபி இந்த புகாரை அளித்து இருந்தார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவரது யூடியூப் சேனலையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் பெண்களுடன் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பேசியது தெரிய வந்தது. பெண்களிடம் அந்தரங்க வி‌ஷயங்களையும் அது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோக்களையும் யூடியூ...
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி? -சிபிஎஸ்இ அறிக்கை தாக்கல்!

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி? -சிபிஎஸ்இ அறிக்கை தாக்கல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி? -சிபிஎஸ்இ அறிக்கை தாக்கல்! கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம் தொடர்பான அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிபிஎஸ்இ தாக்கல் செய்துள்ள அந்த அறிக்கையில், 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை கணக்கில் கொண்டு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் வழங்கும் திட்டம் குறித்து தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, 10ம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பாடங்களில் தலா 30 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். 12-ஆம் வகுப்பு பாடங்களில் 40 சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். இந்த நடைமுறைகள் முடிந்ததும், தேர்வு மு...
குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, * டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.00 கோடி மதிப்பிலான தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. * தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். * கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் திட்டம் செயல்படுத்தப்படும். * குறுவை நெல் சாகுபடிக்காக இடுபொருட்கள், வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படும். * 2,870 மெ.டன் சான்று நெல் விதைகள் 24,000 ஏக்கர் பரப்பில் பசுந்தாளுர விதைகள் மானிய விலையில் தரப்படும். * 1.90 லட்சம் ஏக்கர் பரப்பில் முழு மானியத்தில் ரசாயன உரங்கள் என இடுபொருட்களுக்கு ரூ.50 கோடி நிதியுதவி அளிக்கப்படும். * வேளாண் ...