ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

முதல்வர் நிகழ்ச்சிக்கு நடந்து வந்த அமைச்சர்… பதறிய அதிகாரிகள்!

முதல்வர் நிகழ்ச்சிக்கு நடந்து வந்த அமைச்சர்… பதறிய அதிகாரிகள்!

HOME SLIDER, NEWS, politics
அமைச்சர் செயலால் முதல்வர் நிகழ்ச்சியில் பரபரப்பு..! பதறிப்போன அதிகாரிகள்... சென்னை மெரினாவில் சென்னையின் பெருமையை கொண்டாடும் வகையில் நம்ம சென்னை என்ற செல்பி மையம் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்துவைக்க முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் வருவதால் களைகட்டி இருந்தது மெரினா கடற்கரை சாலை. முதல்வர் வருகை என்பதால் காவல்துறை உயரதிகாரிகள் அரசு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்தனர்.கடற்கரை சாலையில் முதல்வர் வருவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த நேரத்தில் தூரத்தில் ஒரே ஒரு வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நபர் வேகமாக சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார்.... முதல்வர் வரும்போது யாரும் குறுக்கே வந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் அந்த மனிதரை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது.ஆனால் அருகில் சென்ற க...
சீரியல்கள் அனைத்திலிருந்தும் விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட நடிகை ராதிகா முடிவு

சீரியல்கள் அனைத்திலிருந்தும் விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட நடிகை ராதிகா முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
சீரியல்கள் அனைத்திலிருந்தும் விலகி முழுமூச்சுடன் அரசியலில் ஈடுபட நடிகை ராதிகா முடிவு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வேலூர் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். சரத்குமாரை தொடர்ந்து கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளரும், நடிகையுமான ராதிகா பேசியதாவது:- தமிழகத்தில் கொரானா தொற்றால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்தனர், அப்போது கட்சியின் தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் மக்களுக்காக சேவையாற்றினர். அதேவேளையில் கட்சியின் தலைவரும் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்காக சாதி, மதம் பாராமல் அனைவரும் சிறப்பு பிரார்த்தனைகளை செய்தமைக்காக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 2021-ம் ஆண்டில் ஒரு ப...
16 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு

16 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
16 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ந்தேதி தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2ம் அமர்வு மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில், பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. எதிர்க்கட்சிகள் இல்லாமல் பாராளுமன்றத்தில் பலவந்தமாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்....
சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி இல்லை – விக்டோரியா மருத்துவமனை

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி இல்லை – விக்டோரியா மருத்துவமனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி இல்லை சசிகலாவுக்கு தொடர்ந்து 3வது நாளாக கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது சசிகலாவுக்கு திடீரென கடந்த 20-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவதிப்பட்ட அவர், பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மறுநாள் அவர் கலாசிபாளையா பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது நுரையீரலில் தீவிர தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.) அனு...
அரசு விழாவாக ஜெ., பிறந்தநாள் கொண்டாடப்படும் -முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அரசு விழாவாக ஜெ., பிறந்தநாள் கொண்டாடப்படும் -முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அரசு விழாவாக ஜெ., பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் -முதல்வர் பழனிசாமி அறிவிப்பு தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்' பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் 9 அடி உயர முழு உருவச்சிலையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். அதன்பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: * பெண்கள், குழந்தைகளுக்கு அரணாக தமிழக அதிமுக அரசு இருக்கிறது. * கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ...
மெரீனா பீச்சில் “நம்ப சென்னை” செல்பி மையத்தை திறந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

மெரீனா பீச்சில் “நம்ப சென்னை” செல்பி மையத்தை திறந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மெரீனா பீச்சில் "நம்ப சென்னை" செல்பி மையத்தை திறந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!   நம்ம தமிழ்நாட்டோட தலைநகரமான சென்னை மாநகர் முழுக்க குண்டு குழியுமா இருந்தாலும் இப்ப வரை அதிகளவில் உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்றாங்க. அதிலும் சென்னையை குறிக்கும் அடையாளமாக திகழும் மெரினா கடற்கரையில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். பெரும்பாலும் இளைய தலைமுறையினர் வரும் மெரினாவில், மக்களை கவரும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டது. அதன் படி, மெரினா கடற்கரையில் உள்ள ராணி மேரி கல்லூரிக்கு எதிர்ப்பில் சென்னையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ரூபாய் 24 லட்சம் செலவில், செல்ஃபி மையம் அமைக்கப்பட்டது. இளைய தலைமுறையினர் அதிக அளவில் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டுவதால், அவர்களை கவரும் விதமாக இந்த செல்ஃபி மையம் அமைக்கப்பட்ட...
ஆளுயர ஜெ., சிலையை திறந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

ஆளுயர ஜெ., சிலையை திறந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  ஆளுயர ஜெ., சிலையை திறந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! பெண் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்ததற்காகவும், பெண் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டுவந்ததற்காகவும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு ‘ஜெயலலிதா வளாகம்' என்று பெயர் சூட்டப்படும் என்றும், உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்றும் சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலையை அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. சிலை நிறுவுவதற்கான பீடம் அமைக்கப்பட்ட நிலையில், மின்விளக்குகளால் சிலை ஒளிரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று ஜெயலலிதாவின் வேதா இல்லம் திறந்து வைக்கப்பட்ட பிறகு, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி...
கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் வரும் 31ஆம் தேதி சசிகலா டிஸ்சார்ஜ்!

கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் வரும் 31ஆம் தேதி சசிகலா டிஸ்சார்ஜ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் வரும் 31ஆம் தேதி சசிகலா டிஸ்சார்ஜ் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் இருந்த சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனைக்கு சென்ற சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் கையெழுத்து பெற்று விடுதலையை அறிவித்தனர். மேலும் இதுதொடர்பான எழுத்துபூர்வ அறிக்கையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லாத நிலை தொடர்ந்தால் வரும் 31ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சசிகலா இன்று (ஜன. 27) காலை 11 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். கடந்த 20-ம் தேதி பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 21 ஆம...
ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெ., நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெ., நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  ரூ.57.8 கோடி மதிப்பில் சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே 8ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர். இந்தநிலையில் தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். . அதனை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர...
யூ-டியூப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

யூ-டியூப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
யூ-டியூப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் திருநெல்வேலியைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சென்னையில் பெண்களிடம் தவறான முறையில் கேள்விகள் கேட்டு யூ-டியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களது யூ-டியூப் சேனல் போலீசாரால் முடக்கப்பட்டு விட்டது. இருப்பினும் அவர்களது வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் 2012 ஆம் ஆண்டு நடந்த சர்வே ஒன்றில் இணையதளம் மூலம் மிரட்டுவதில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்தப...