ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி மதுரையில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி மதுரையில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா தடுப்பூசி மருந்துகள் நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு செலுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்காக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சுகாதார நிலையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் ஒத்திகை 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த ஒத்திகை திருப்திகரமாக இருந்ததால் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விமானம் மூலம் அனுப்பி வைத்தது. சென்னைக்கு கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ்கள் வந்தது. இதே போல் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் 20 ஆயிரம் கோவேக்சின் தடுப்பு மருந்துகளும் பாதுகாப்பாக கொண்ட...
மதுரை மக்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி!

மதுரை மக்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மதுரை மக்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி! பொங்கல் திருவிழாவை தமிழர்கள் கொண்டாடி வரும் நிலையில் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மதுரை வந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் அவர் ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்து பார்த்தார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் அவர் மதுரை மக்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டதாக தகவல்கள் வெளிவந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை தென்பலஞ்சி என்ற பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அந்த பகுதி பொது மக்களோடு அமர்ந்து மதிய உணவை சாப்பிட்டதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர். தேர்தல் வந்துவிட்டாலே அரசியல்வாதிகள் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து பழகுவார்கள் என்பது தெரிந்ததே....
ஜல்லிக்கட்டு பற்றி புரிந்து கொண்டேன்- ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டு பற்றி புரிந்து கொண்டேன்- ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மதுரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு துன்புறுத்தல் விளைவிக்கக் கூடியது என முதலில் என்னிடம் சொல்லப்பட்டது. ஆனால் அதை நான் நேரில் பார்த்தபோது அதில் எந்த துன்புறுத்தலும் இல்லை என்பதை உணர்ந்தேன். கலாச்சாரங்கள் நசுக்கப்படுகின்றன. தமிழ் மொழியை நசுக்க முயற்சிகள் நடக்கின்றன. தமிழ் மக்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அதற்காக அவர்களுக்கு நன்றி. டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ள வில்லை. அவர்களுக்கு எதிராக சதி செய்கிறது. பிரதமர் மோடி, நாட்டிற்கான பிரதமரா? தொழிலதிபர்களுக்கான பிரதமரா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்....
ட்ரம்பும் – பாஜகவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்-மம்தா பானர்ஜி காட்டம்!

ட்ரம்பும் – பாஜகவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்-மம்தா பானர்ஜி காட்டம்!

HOME SLIDER, NEWS, politics
ட்ரம்பும், பா.ஜ.கவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்-மம்தா பானர்ஜி காட்டம்! தோல்வியை ஒப்புக்கொள்ளாத அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், பா.ஜ.கவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில முதல்வர். மம்தா பானர்ஜி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நடியாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கும், பா.ஜ.க வுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தேர்தலில் தோற்ற பின்னரும் வெற்றி பெற்று விட்டதாக ட்ரம்ப் கூறுகிறார். அதுபோல் பா.ஜ.கவும் தனது தோல்வியை ஒப்புக்கொள்வதில்லை. வேளாண் சட்டத்தை எதிர்த்து டில்லியில் ஒரு மாதமாக போராடும் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அவர்கள் மீது மத்திய அரசு அடக்குமுறையை ஏவி விடுகிறது. ” என்றும் அவர் குற்...
தமிழக சட்டசபை தேர்தலை நடத்த செலவு ரூ.621 கோடி!

தமிழக சட்டசபை தேர்தலை நடத்த செலவு ரூ.621 கோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக தேர்தல் கமி‌ஷன் எடுத்துள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தமிழக சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு மாநில அரசிடம்  ரூ.621 கோடி கேட்டுள்ளோம். * கொரோனா காலம் என்பதால் செலவு தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது....
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது -அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது -அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது -அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை சென்னையில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று அதிகாலை வந்தடைந்தன. அந்த மருந்துகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் கலெக்டர் சிவராசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் இந்த தடுப்பூசி மருந்துகள் தகுந்த குளிர்பதன முறையில் பராமரிக்கப்பட்டு புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தடுப்பூசி வாகனங்களை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து அனுப்பி வைத்தார். பிறகு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் வருகிற 16-ந்தேதி கொரோனா தடுப்பூ...
சிறுத்தையுடன் தனி ஆளாக வெற்றுக்கரங்களுடன் போராடி உயிர்பிழைத்த வீரப்பெண்!

சிறுத்தையுடன் தனி ஆளாக வெற்றுக்கரங்களுடன் போராடி உயிர்பிழைத்த வீரப்பெண்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் பட்கவா தேயிலை தோட்டத்தில் பெண் ஒருவர் பணிக்கு சென்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுத்தை ஒன்று திடீரென அவரை தாக்க வந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண், ஆயுதமின்றி நிராயுதபாணியாக நின்றாலும், வெற்றுக்கரங்களுடன் சிறுத்தையுடன் சண்டை போட ஆரம்பித்தார். 10 நிமிட போராட்டத்திற்கு பின்பு சிறுத்தை அவரை தாக்குவதை நிறுத்திவிட்டு காட்டிற்குள் ஓடி மறைந்தது சிறுத்தையின் தாக்குதலால் அவர் காயம் அடைந்திருந்தார். சிறிது நேரத்திற்கு பின்பு, அக்கம்பக்கத்தில் வேலைபார்த்த மற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இதை அறிந்தனர். உடனே அவர்கள், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுத்தையுடன் தனி ஆளாக வெற்றுக்கரங்களுடன் போராடி உயிர்பிழைத்த அந்த வீரப்பெண்மணியின் பெயர் லீலா ஓரான் என்று தெரியவந்தது. “அந்த பெண்மணியின் பலம் வியக்கத்தக்கது என்றும், அவர் நல்ல...
அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிகவுக்கு  கல்தா?! 

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிகவுக்கு  கல்தா?! 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிகவுக்கு  கல்தா?! தமிழகத்தில் மிகவும் வலுவான கட்சிகளில் முதன்மையாக உள்ள கட்சி அதிமுக. அக்கட்சியின் தலைமையில் தேர்தல் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில், பாஜக, தமாகா, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த கூட்டணியில் இருந்து ஒரு கட்சியை சைலண்டாக கழட்டிவிட முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது சென்னை வந்த மத்திய உள் துறை அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவருமான அமித் ஷா, அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  இதனைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பாஜக -அதிமுக கூட்டணியை உறுதிபடுத்தினார். ஆனால், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் விஜயகாந்த் அவதிப்பட்டு வந்த விஜயகாந்தை, கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற ரீதியில், மத்திய அமை...
‘கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் – சத்தீஷ்கார் அரசு எதிர்ப்பு

‘கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் – சத்தீஷ்கார் அரசு எதிர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
‘கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் - சத்தீஷ்கார் அரசு எதிர்ப்பு கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள ‘கோவிஷீல்டு, கோவேக்சின்’ ஆகிய தடுப்பூசி மருந்துகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி கொரோனா தடுப்பூசி போடும் பணி வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால் காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஷ்கார் மாநிலம் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் என்று திடீரென அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தியோ கூறுகையில், ‘‘கோவேக்சின்’ தடுப்பூசியின் சோதனை இன்னும் முடியவில்லை. அதற்குள் அனுமதி அளித்திருக்கிறார்கள். சத்தீஷ்கார் மாநிலத்தில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். மாநில மக்களும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனிதர்கள் வாழ்க்கையில் ...
தமிழகத்தில் ஜனவரி 19ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது!

தமிழகத்தில் ஜனவரி 19ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 9 மாதமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். இதனால் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மன உளைச்சலுக்கும், அழுத்தத்திற்கும் ஆளாகி வருகின்றனர். ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பு வைக்கப்பட்ட போதிலும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி தமிழகம் முழுவதும் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை எழுத்து மூலம் தெரிவித்தனர். பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர...