ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

13 வகை மளிகைப் பொருள், 2ஆம் தவணை நிவாரண நிதி -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

13 வகை மளிகைப் பொருள், 2ஆம் தவணை நிவாரண நிதி -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
13 வகை மளிகைப் பொருள், 2ஆம் தவணை நிவாரண நிதி -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் கொரோனா நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக மேலும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், மக்களின் சிரமங்களை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் 13 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கோதுமை, ரவை, சர்க்கரை, உப்பு, புளி, மஞ்சள் தூள், கடுகு, பருப்பு, சீரகம், குளியல் சோப், சலவை சோப் உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 13 வகையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டது. நிவாரணப் பொருட்கள...
கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவியதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். தினமும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் முழு ஊரடங்கு கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 1-ந்தேதியில் இருந்து மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவுவது குறைந்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதிர் பார்த்த அளவுக்கு குறையவில்லை. இதனால் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி இந்த மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரண...
பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். ஆலோசனைக்குப் பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. மத்திய அரசு நடத்திய ஆலோசனையின் போது பெரும்பாலான மாநிலங்கள் பிளஸ்-2 தேர்வை நடத்தக்கோரியிருந்தன. ஆனால், சிபிஎஸ்இ தேர்வை மத்திய அரசு நேற்று ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும். 14417 என்ற தொலைபேசி எண்ணில் கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்...
நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி பகீர் புகார்!

நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி பகீர் புகார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி பகீர் புகார்! சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அண்மையில் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிகண்டன் தன்னை 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது அந்தரங்க புகைப்படங்களை வைத்து கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதுதொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, கட்டாய கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் காவல...
சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சரவையில் முக்கிய முடிவு!

சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சரவையில் முக்கிய முடிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சரவையில் முக்கிய முடிவு! இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலைவரிசை மிகப்பெரிய அளவில் பரவி உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வை நடத்த வேண்டாம் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூடியது. இதில் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது....
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?

HOME SLIDER, NEWS, செய்திகள்
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும். * தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும். * ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே பாடப்புத்தகம் விநியோகிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். * தனியார் பள்ளிகள் குறித்த புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள கல்விக் கட்டண புகார்களுக்காக அமைக்கப்பட்ட குழு வலுப்படுத்தப்படும். * அரசு பள்ளிகளில்  மாணவர் சேர்க்கையை அதிகரிக்க  தனியார் பள்ளிகளுக்கு இணையாக கட்டமைப்புகளை மேம்படுத்தி விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்....
முழு ஊரடங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முழு ஊரடங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வீடியோவில் பேசி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம். எல்லாரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து தான் மற்றொருவருக்குப் பரவுகிறது. அதனால் தொற்று தங்கள் மீது பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். அதே போல் நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை உடைத்தாலே கொரோனா பரவலைத் தடுத்துவிட முடியும். கடந்த 24-ந்தேதி முதல் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 7 நாட்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24-ந்தேதி முதல் சென்னை...
முழு ஊரடங்கால் நல்ல பலன் கிடைத்தது- 37 மாவட்டங்களில் பாதிப்பு சரிவு!

முழு ஊரடங்கால் நல்ல பலன் கிடைத்தது- 37 மாவட்டங்களில் பாதிப்பு சரிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முழு ஊரடங்கால் நல்ல பலன் கிடைத்தது- 37 மாவட்டங்களில் பாதிப்பு சரிவு! தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-வது அலை பரவத் தொடங்கியது. இதன் பின்னர் ஏப்ரல் தேர்தல் நடைபெற்ற நிலையில் நோயின் தாக்கம் மேலும் அதிகரித்தது. கடந்த 12-ந்தேதி அன்று தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து இருந்தது. இதன் பிறகு நோயின் தாக்கம் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்த தினசரி பாதிப்பு கடந்த 20-ந்தேதி அன்று 35 ஆயிரத்தை கடந்தது. அன்று 35,579 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. அதற்கு மறுநாள் (21-ந்தேதி) 36,194 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. இதுவே அதிகபட்ச தினசரி பாதிப்பாகும். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதியில் இருந்து தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 26-ந்தேதியில் இருந்து நோயின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் முழ...
மெகுல் சோக்சியை எங்களிடம் ஒப்படையுங்கள் -டொமினிகாவிடம் இந்தியா வேண்டுகோள்!

மெகுல் சோக்சியை எங்களிடம் ஒப்படையுங்கள் -டொமினிகாவிடம் இந்தியா வேண்டுகோள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
மெகுல் சோக்சியை எங்களிடம் ஒப்படையுங்கள் -டொமினிகாவிடம் இந்தியா வேண்டுகோள்! பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால், சி.பி.ஐ. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்திருந்த மெகுல் சோக்சியை (வயது 62) இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆன்டிகுவா குடியுரிமை பெற்ற அவரை நாடு கடத்துவது தொடர்பான சட்ட நகர்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென மெகுல் சோக்சி காணாமல் போனார். ஆன்டிகுவாவை விட்டு வெளியேறிய மெகுல் சோக்சி, படகு மூலம் அருகில் உள்ள சிறிய தீவு நாடான டொமினிகாவுக்கு சென்றபோது போலீசில் சிக்கினார். சட்டவிரோதமாக ...
7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்!

7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்! கொரோனா பரவாமல் இருப்பதற்காக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை வருகிற 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த நிலையில் பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடை வியாபாரிகள் தங்களது வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் நாளை (திங்கட்கிழமை) முதல் தெருத்தெருவாக சென்று விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள கடைகளுக்கு சென்று சீட்டு எழுதி கொடுத்து விட்டு வந்து விடலாம் அல்லது செல்போன் மூலமும் மளிகைப் பொருட்களை வாங்க தகவல் கொடுக்கலாம். கடைக்காரர்கள் இந்த பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகைப் பொருட்களை விநியோகிக்க நேரம் ஒதுக்கி உள்ளது. இ...