ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – முதல்வர்பழனிசாமி  அறிவிப்பு

தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – முதல்வர்பழனிசாமி அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நிவர் புயல் தொடர்பாக உதவிகளை மேற்கொள்ள சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்பழனிசாமி  கூறியவாவது:- நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகம் முழுவதும் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது...
7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரை சந்தித்த ஸ்டாலின்!

7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரை சந்தித்த ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இது தொடர்பாக 2018 செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் முடிவெடுக்காமல் உள்ளார். எனவே இதுகுறித்து ஆளுநரிடம் கூறியதற்கு, முறையாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்' என்றார்....
கரை வேட்டியில் பைக் ஓட்டிய அமைச்சர் ஜெயக்குமார்!

கரை வேட்டியில் பைக் ஓட்டிய அமைச்சர் ஜெயக்குமார்!

NEWS
எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி சென்னை அண்ணாசாலை. இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் செல்லும் சாலை தான் இது.காலை 11 மணி இருக்கும் வெள்ளை வேட்டி, சட்டை அதுவும் அதிமுக கரை வேட்டியுடன் பைக்கில் ஒருவர் ஹெல்மெட் அணிந்துகொண்டு வேகமாய் வந்து ஸ்பென்சர் சிக்னலில் நிற்கிறார். அக்கம் பக்கத்தில் இருந்த வாகன ஓட்டிகள் இவர் யார் என்று சிறிய சந்தேகத்துடன் உற்று நோக்குகின்றனர்.அவர்களைப் பார்த்து கையசைத்து சிரிக்கிறார் அவர். அப்போது தான் அவர்களுக்கு தெரிகிறது அவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பது. காரில் இருந்த சிலர் பைக்கில் இருந்த சிலர் இறங்கி அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்துக் கொள்கின்றனர். "என்ன சார் எங்கே போறீங்க?கார்ல ஏன் வரல? பைக்கில் வந்து இருக்கீங்களே" என்று கேட்கிறார்கள். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சிரித்துக்கொண்டே, ஹெல்மெட் என்பது மிக மிக அவசியம் இன்றைக்கு முகக்கவசம் எவ்வளவு முக்கியமானதாக இருக்க...
300 சவரன் நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் பிரபல Ex. ரவுடி  வரிச்சியூர் செல்வம்

300 சவரன் நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் பிரபல Ex. ரவுடி  வரிச்சியூர் செல்வம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  பெண்களை விடமும் பெரும்பாலான ரவுடிகள்தான் அதிக நகைமோகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கிராம் கணக்கு என்றில்லாமல் கிலோ கணக்கில் நகைகளை போட்டுக்கொண்டு வலம் வருகிறார்கள். மதுரை வரிச்சியூரை சேர்ந்த பிரபல ரவுடி  வரிச்சியூர் செல்வம்  இப்போது மனம் திருந்தி வாழ்ந்து வரும் அவர், இப்போது நடமாடும் நகைக்கடையாகவே வலம் வருகிறார். 'நாலு பேருக்கு மத்தியில் வித்தியாசமாக தெரியவேண்டும் என்பதால்தான் 300 சவரன் நகைகளை அணிந்திருக்கிறேன். அதற்கு மேல் சுமப்பதற்கு சிரமமாக இருப்பதால்தான் 300 சவரனுக்கு மேல் நகை அணிவதில்லை.  கொரோனா காலத்தில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதால், ஒரு வித்தியாசம் வேண்டும் என்பதற்காக, முகத்தை அளவெடுத்து 10 சவரன் தங்கத்தில் முகக்கவசம் செய்து அணிந்திருக்கிறேன்' என்று சொல்லி வருகிறார்....
எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்தெறிந்து திமுகவின் பரப்புரை பயணம் தொடரும்

எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்தெறிந்து திமுகவின் பரப்புரை பயணம் தொடரும்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதுக்குறித்து ஏற்கனவே, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் வருகிற நவ.23ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும். அப்போது உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்,திட்டமிட்டப்படி இன்று காலை கூட்டம் தொடங்கியது. இதில் 27 முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன். அத்துடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக உயர்நிலை ச...
முன்னெச்சரிக்கை ஏற்பாடாக புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் -அமைச்சர் தங்மணி

முன்னெச்சரிக்கை ஏற்பாடாக புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் -அமைச்சர் தங்மணி

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி வலுவடைந்து, புயலாக (‘நிவா்’) மாறி புதன்கிழமை கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், புயலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்மணி தெரிவித்துள்ளார். தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து, புயலாக (‘நிவா்’) மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் புதன்கிழமை (நவ.25) பிற்பகலில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, புயல் கரையை கடக்கும் போது முன்னெச்சரிக்கை ஏற்பாடாக புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்ப...
நிவர் புயல் முன்னெச்சரிக்கை தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என்று முதல்வர் அறிவிப்பு. வரும் நவம்பர் 25 ஆம் தேதி நிவர் புயல் கரையை கடக்கவிருப்பதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “நிவர் புயலை முன்னிட்டு செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.  ...
வங்கக் கடலில் புயல் சின்னம்… நாளை 6 மாவட்டங்களில் அதீக கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் புயல் சின்னம்… நாளை 6 மாவட்டங்களில் அதீக கனமழைக்கு வாய்ப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
வங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீக கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நாளை புயலாக மாறி நாளை மறுநாள் காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்கக் கூடும். தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்  மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்ய...
கனமழை எச்சரிகையால் பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை!

கனமழை எச்சரிகையால் பயிர்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கனமழைக்கான வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய வேளாண்துறை அறிவுறுத்தல் நவம்பர் 24, 25 மற்றும் 26ஆம் தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களுக்கு பயிர்காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேளாண்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்சமயம் சம்பா நெற்பயிர், சிறுதானிய பயிர்கள், பயறுவகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் உள்ளிட்ட பயிர்களுக்கான பயிர்காப்பீடு நடைபெறுவதாக அறிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 30ஆம் தேதிக்குள்ளும் , தஞ்சாவூர், அரியலுர் உள்ளிட்ட 9மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள்ளும் சம்பா நெல்பயிர் காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது....
திருப்பதி செல்லும் வழியில் சென்னை வரும் ஜனாதிபதி!

திருப்பதி செல்லும் வழியில் சென்னை வரும் ஜனாதிபதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திருப்பதி செல்லும் வழியில் நாளை காலை டில்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறாா். இதையடுத்து சென்னை பழைய விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை காலை 6.30 மணிக்கு டில்லி பாலம் விமானநிலையத்திலிருந்து தனி விமானத்தில் புறப்படுகிறாா். காலை 9.15 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வருகிறாா்.அங்கு ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்பு காலை 9.45 மணிக்கு சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் திருப்பதி புறப்பட்டு செல்கிறாா். அதன்பின்பு நாளை மாலை திருப்பதியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வருகிறாா்.ஜனாதிபதியை வரவேற்று வழியனுப்புகின்றனா்.இதையடுத்து மாலை 5.45 மணிக்கு சென்னை பழைய விமானநிலையத்திலிருந்து தனி விமானத்தில் டில்லி புறப்பட்டு செல்கிறாா்...