ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம்!

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லியில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் காட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால். கொரோனா தொற்றால் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக உலகமே பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மே மாதம் முதலாக கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்ட நிலையில் தற்போது மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மீண்டு கொரோனா பாதிப்புகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெல்லியில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக டெல்லியில் முகக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் ரூ.500 ஆக இருந்த நிலையில் தற்போது அதை ரூ.2000 ஆக உயர்த்தி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்...
விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் -மதுரை ஐகோர்ட்

விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் -மதுரை ஐகோர்ட்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரபி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால், இளைஞர்கள் அதற்கு அடிமையாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடன் தொல்லை அதிகமாகி இதுவரை 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  இந்த விளையாட்டு தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தடையின்றி ஆன்லைன் சூதாட்டம்  நடைபெற்று வருகிறது. எனவே, அனைத்து ஆன்லைன் விளையாட்டுகள், ரம்மி விளையாட்டுகளை தடைசெய்ய  வேண்டும். இந்த ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி இருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, விளையாட்டு  வீரர்கள் கங்குலி, விராட் கோலி மற்றும் நடிகர...
தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பு

தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் காவல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் காவலர்கள் பணியாற்றும் நேரம், விடுப்பு முறை மற்றும் பணி நாள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து மற்ற மாவட்டங்களில் பணி விதிகள்படி வாரத்தில் 6 நாள் வேலை பார்த்தால், ஒரு நாள் விடுப்பு வழங்க, தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கொரோனா காரணமாகவும், உடல்நிலை சரியில்லாமலும், மன உளைச்சல் காரணமாக காவலர்கள் அதிகம் உயிரிழப்பதை தடுக்க, வார விடுப்பை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பும் ஞாயிற்றுக்கிழமை விடுப்பை சுழற்சி முறையில் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்....
தமிழ்நாட்டு மருத்துவப் பட்டியலில் இடம் பெற்ற தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – திருமாவளவன்

தமிழ்நாட்டு மருத்துவப் பட்டியலில் இடம் பெற்ற தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – திருமாவளவன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ்நாட்டுப் பட்டியலில் இடம் பெற்ற தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெலங்கானாவைச் சேர்ந்த 34 பேர் தமிழ்நாட்டுப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மோசடியாக குடியிருப்புச் சான்றிதழ் பெற்று இப்படி இடம் பெற்றிருக்கிறார்களா? என்ற ஐயம் எழுந்துள்ளது. அவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாணவர்கள் 34 பேரையும் இனி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். தமிழக மாணவர்களின் மருத்துவப் படி...
அபராதத் தொகை 10.10கோடியை கோர்ட்டில் கட்டிய சசி… விடுதலைக்கு நாள் குறிப்பு!

அபராதத் தொகை 10.10கோடியை கோர்ட்டில் கட்டிய சசி… விடுதலைக்கு நாள் குறிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அபராதத் தொகை 10.10கோடியை கோர்ட்டில் கட்டிய சசி... விடுதலைக்கு நாள் குறிப்பு!   தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிகலா விடுதலையை எதிர்பார்த்து அமமுகவினர் காத்துள்ள நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் அபராத தொகையை சசிகலா செலுத்தியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அமமுக தரப்பிலோ எந்த விதமான கூட்டமும் நடத்தப்படாமல் உள்ளதால், அமமுகவினர் சசிகலாவின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிகிறது. அதற்கேற்றார்போல டிடிவி தினகரனும் கட்சி பணிகளை விடவும் சசிகலா விடுதலை தொடர்பாக டெல்லிக்கு பயணமானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சசிகலா ஜனவரிக்குள் விடுதலையாவார் என அமமுக தரப்பில் பேசிக் கொள்ளப்படுகிறது. தற்போது சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகைய...
லாரி மோதிய விபத்து “கடவுள் முருகன்” காப்பாற்றினாராம் சொல்கிறார் குஷ்பு!

லாரி மோதிய விபத்து “கடவுள் முருகன்” காப்பாற்றினாராம் சொல்கிறார் குஷ்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  வேல் யாத்திரைக்கு புறப்பட்ட குஷ்புவின் கார் மீது கண்டய்னர் லாரி பயங்கரமாக மோதியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக குஷ்புவுக்கு காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். மேல்மருவத்தூர் அருகே நடந்த இந்த விபத்தில் குஷ்புவின் கார் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சிக்கிய பின்னரும் வேல் யாத்திரைக்கு கடலூர் சென்றார் குஷ்பு. முன்னதாக "என் கணவர் வழிபடும் கடவுள் முருகன் தான் விபத்தில் இருந்து தன்னை காப்பாற்றினார்" என டிவீட் போட்டிருக்கிறார் குஷ்பு. அரசியலுக்காக இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ....
குவாலியர் வீதிகளில் பிச்சை எடுக்கும் “என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்” போலீஸ் SI

குவாலியர் வீதிகளில் பிச்சை எடுக்கும் “என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்” போலீஸ் SI

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மனீஷ் மிஸ்ரா என்ற துடிப்பாடன் இளைஞர் 1999ஆம் ஆண்டில் மத்திய பிரதேச காவல்துறையில் உதவி ஆய்வாளராக சேர்ந்தார். 1999ஆம் ஆண்டில் காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்த 250 பேரில் சிறந்த தடகள வீரராகவும் குறி பார்த்து சுடுவதிலும் நிபுணத்துவமும் பெற்ற மனீஷ் மிஸ்ரா, ஒரு முன்னாள் காவல் அதிகாரியின் மகன். அவரது மூத்த சகோதரரும் ஒரு காவல் ஆய்வாளர்.  குனா மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.மனீஸ் மிஸ்ரா தனது பணியில் சில என்கவுன்ட்டர் பணிகளையும் அவர் மேற்கொண்டிருக்கிறார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அவர் கடைசியாக 2005ஆம் ஆண்டில் தாட்டியா மாவட்டத்தில் பணியாற்றினார். ஆனால் திடீர் என மனீஷ்மிஸ்ராவை கடந்த  15 ஆண்டுகளாக காணவில்லை. இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி தேர்தல் பணிக்காக ரோந்துப் பணியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ரத்னேஷ் சிங்கும் விஜய் சிங் பதோரியாவும் குளிரில் ந...
திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சி யதார்த்தமானதாக இருக்கும் – தினேஷ் குண்டுராவ் 

திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சி யதார்த்தமானதாக இருக்கும் – தினேஷ் குண்டுராவ் 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சி யதார்த்தமானதாக இருக்கும் - தினேஷ் குண்டுராவ் காங்கிரஸின் பலம் மற்றும் கட்சிகளின் வாக்கு அடிப்படையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு இருக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்து உள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், தமிழக சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு மிகக்குறைந்த இடங்களே வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 8 இடங்களை மட்டுமே அந்த ...
தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய வழிமுறைகள்!

தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய வழிமுறைகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்றவற்றைச் செய்ய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன தமிழக வரைவு வாக்காளர் பட்டியலைத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு வெளியிட்டார். இந்த வரைவு பட்டியலின் அடிப்படையில் பெயர் சேர்க்க, நீக்க, மற்றும் பெயரில் அல்லது திருத்தங்கள் செய்ய விரும்புவோர் டிசம்பர் 15 வரை செய்யலாம். மேலும் இதற்கான முகாம்கள் அந்தந்த பகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் நவம்பர் மாதம் 21 ,22, 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டிசம்பர் மாதம் 5, 6, 12 மற்றும் 13 ஆம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 22.01.2021 அன்று வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் புதியதாகப் பெயர் சேர்க்க விரும்புவோர் 01.01.2021 அன்று அல்லது அதற்கு முன்பு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்...
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! குமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளி...