சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

திரைப்படங்கள்

கெத்தான விவசாயியாக வலம் வரும் `கடைக்குட்டி சிங்கம்’ கார்த்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `கடைக்குட்டி சிங்கம்'. முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடிக்கும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். நாயகியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் அர்த்தனா நடிக்கின்றனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தில் கார்த்தி மாதம் 1½ லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார். எப்படி பொறியாளர், டாக்டர் என்று எல்லோரும் தங்கள் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமையாக சொல்லிக் கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி, தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இட...
தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி

தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும்,  நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் மக்களின் முன்னிற்கும் சவால்களாய் மாறிக் கொண்டிருக்கிறது. இப்படி மக்களின் அடிப்படைத் தேவையாய், அத்தியாவசியமாய் விளங்கக் கூடிய தண்ணீரினை மையமாய் வைத்து உருவாகியிருக்கும் படம் தான் “கேணி”. “காற்று, வானம், நிலம் போல இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தண்ணீர். அந்தத் தண்ணீரை உரிமை கொண்டாட எந்த ஒரு தனி மனிதனுக்கும் உரிமையில்லை” என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கும் “கேணி” திரைப்படம் வருகிற பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் கூறும் கருத்தின் முக்கியத்துவம் கருதி நடிகை ஜெயப்பிரதா நீ...
நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா

நடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் சினிமா படமாக தயாராகிறது. சாவித்திரியின் சிறுவயது வாழ்க்கை, சினிமாவில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது, நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து கொண்டது, பின்னர் சொந்த படம் எடுத்து சொத்துக்களை எல்லாம் இழந்து இறுதி காலத்தில் வறுமையில் வாடி இறந்தது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இடம்பெறுகின்றன. சாவித்திரி குடும்பத்தினர், நண்பர்கள், பழம்பெரும் நடிகர்கள் ஆகியோரிடம் பேசி தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் சாவித்திரி வேடத்தில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சாவித்திரி போன்று தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார் சமந்...
ரஜினிகாந்தின் 2.0 படத்தை ரிலீஸ் செய்வதில் நீடிக்கும் குழப்பம்

ரஜினிகாந்தின் 2.0 படத்தை ரிலீஸ் செய்வதில் நீடிக்கும் குழப்பம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் 2.0 படம் எப்போது வெளியாகும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் உள்பட படத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள் அனைவரும் ‘டப்பிங்’ பேசியும் முடித்து விட்டனர். கடந்த வருடம் தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். தொழில் நுட்ப பணிகள் தாமதமானதால் ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர். பின்னர் ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் அன்று படம் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2.0 படத்துக்கு பதில் ரஜினிகாந்தின் காலா படம் அதே நாளில் வெளியாகிறது. 2.0 படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. தற்போது இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதிக்கு வெளியாக இருக...
சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்..!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். சிவாவின் நெருங்கிய நண்பனாகவும், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் மிகவும் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை சிவா தயாரிக்கிறார். கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, ‘திரைத்துறை தான் எனக்கு பெயரும், புகழும் கொடுத்தது. இந்த துறைக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். சாதிக்கும் கனவில் நாங்கள் சுற்றிய போது எல்லா நிலைகளிலும் என்னுடன் இருந்த, என் நண்பர்களின் கனவையும் புரிந்து கொள்வது என் கடமையாக உணர்கிறேன். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் அரு...
விஜய்யுடன் நடிக்கும் போது ரசிகையாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

விஜய்யுடன் நடிக்கும் போது ரசிகையாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது மீண்டும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாகி இருக்கிறார். இதுபற்றி கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி.... “மீண்டும் விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை என்னுடன் நடிக்கும் நடிகராக எப்போதும் பார்க்க முடியாது. அவருடன் நடிக்கும் போது எனக்கு பிடித்த நடிகருடன் இருக்கும் ரசிகையாகவே என்னை நினைத்துக்கொள்கிறேன். நான் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மகாநதி’யில் நடித்திருக்கிறேன். நாக் அஸ்வின் இதை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தொடங்கியபோது மேக்கப்போட மட்டும் மூன்றரை மணி நேரம் ஆனது. பின்னர் அது பழகிப்போனது. சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவ்வளவு பெரிய நடிகை பாத்திரத்தில் நடிக்க பயமாக இருந்தது. இப்போது இந்த படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. சாவித்ரி...
நயன்தாராவுக்கு ஏற்றது போல் கேரக்டரை மாற்றினேன் – இமைக்கா நொடிகள் இயக்குநர்

நயன்தாராவுக்கு ஏற்றது போல் கேரக்டரை மாற்றினேன் – இமைக்கா நொடிகள் இயக்குநர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘டிமாண்டி காலனி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இவர் தற்போது நயன்தாராவை வைத்து இமைக்கா நொடிகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து அளித்துள்ள பேட்டியில், “முதலில் இந்தக் கதையை எழுதும்போது இரண்டு ஹீரோக்கள் கதையாகத்தான் எழுதினேன். அதன்பிறகுதான் ஒரு கேரக்டரை மட்டும் நயன்தாராவுக்கு ஏற்றது போல் மாற்றினேன். ஆனால், நயன்தாரா இந்தக் கதையில் நடிப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. காரணம், கதைப்படி துப்பறியும் நிபுணராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. எனவே, துப்பாக்கியைக் கையாள்வதிலும், வில்லன்களைத் துரத்திப் பிடிப்பதிலும் சில சிக்கல்கள் இருந்தன. அந்தக் காட...
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா

ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான பின்பு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது சினிமா பிரவேசத்தை தொடங்கினார். இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தநிலையில் வித்யா பாலன் நடித்துள்ள ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் கதையாகும். வித்தியாபாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும் இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த மொழ...
தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்பட சாதனைகள்..!

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்பட சாதனைகள்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
 மெர்சல் திரைப்படத்தின் சாதனைகள் * தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும்  வெற்றியையும் ,வசூல் சாதனையும் படைத்தது. தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது . டீசர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் Views தொட்டு சாதனை படைத்துள்ளது . தென்னிந்திய அளவில் அனைவராலும் U-TUBE இல் பார்க்கப்பட்ட விடீயோஸ் மற்றும் அதிக LIKES பெற்ற வீடியோகளில் மெர்சல் படம் முதல் இடத்தை பெற்றுள்ளது. *அதிக அளவில் பார்க்கப்பட்ட லிரிக்ஸ் சாங் *அதிக அளவில் லைக் செய்யப்பட்ட லிரிக்ஸ் சாங் *அதிக அளவில் பார்க்கப்பட்ட ஆடியோ டீஸர் *அதிக அளவில் லைக் செய்யப்பட்ட வீடியோ சாங் *மிக விரைவில் பார்க்கப்பட்ட 20 மில்லியன் வீடியோ சாங் *அதிக அளவில் லைக் செய்யப்பட்ட ப்ரோமோ சாங் தளபதி விஜயின் கடைசி 10...
விமலின் ‘கன்னிராசி’ படத்தை வெளியிடும் உரிமையை வாங்கிய சிங்காரவேலன்..!

விமலின் ‘கன்னிராசி’ படத்தை வெளியிடும் உரிமையை வாங்கிய சிங்காரவேலன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன்பிறகு வெளியான படங்கள் கூட தியேட்டரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையிலும், போட்டிக்கு புதிதாக பல படங்கள் வெளியான நிலையிலும் ‘மன்னர் வகையறா’வுக்கான வரவேற்பு இன்னும் குறையவே இல்லை என்கிறார்கள் வினியோகஸ்தர்கள். மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய விமலும், படத்தை இயக்கிய பூபதி பாண்டியனும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும் இதன் பின்னணியில் வெற்றிக்கான முக்கிய தூணாக இருந்துவருபவர் தான் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்கார வேலன். குறிப்பாக ‘மன்னர் வகையறா’ பட ரிலீசின்போது விமலின் ‘ஜன்னலோரம்’ பட இழப்பீடு விவகாரம் தலைதூக்க, தனது கையில் இருந்து 2 கோடி ரூபாய் கொடுத்து எந்தவித சிக்கலுமின்றி ‘மன்னர் வகையறா’ வெளிவர உதவினார் சிங்காரவேலன். அடுத்ததாக விமலின் நடிப்பில் தயாராகிவரும் ‘கன்னிராசி’ படத்தை வெள...