உள்குத்து பெயரில் மட்டுமே – விமர்சனம்
அன்பான அக்காவையும், மாமாவையும் கொடூரமாக கொல்லும் கந்து வட்டி கும்பலை அவர்களோடு ஒருவனாக பழகி பழி வாங்க நினைப்பதே உள்குத்து.
தலைப்பு ரொம்ப அழுத்தமாக இருக்கிறது.
அந்தளவுக்கு படம் இருக்கிறதா...
முட்டம் என்ற மீனவக் குப்பத்தின் கடற்கரையில் தனியாக அமர்ந்திருக்கும் ராஜாவை (தினேஷ்) அதே பகுதியில் பில்டப்பில் காலத்தை ஓட்டும் சுறா சங்கர் (பால சரவணன்) தன் வீட்டுக்கு அழைத்துவந்து வைத்துக்கொள்கிறார் அவரது தங்கை கடலரசியும் அவனது பாட்டியும் உள்ள அந்தச் சிறிய குடும்பத்தில் இணைகிறான் ராஜா.
அந்தப் பகுதியைச் சேர்ந்த காக்கா மணியும் (சரத்) அவரது மகன் சரவணனும் (திலீப் சுப்பராயன்) படகு செய்யும் தொழில் செய்துகொண்டே கந்து வட்டி தொழிலையும் செய்துவருபவர்கள். எதிர்பாராமல் அவர்களது ஆள் ஒருவரை அடித்துத் துவைக்கிறார் ராஜா. அதற்குப் பிறகு சரவணனையும் அடிக்கிறார். பிறகு தந்திரமாக காக்கா மணியுடன் நெருங்கி, ச...







