சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

திரைப்படங்கள்

அஜீத்தின் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது! ரசிகர்கள் ஏமாற்றம்!!

அஜீத்தின் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது! ரசிகர்கள் ஏமாற்றம்!!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜீத்தின் வலிமை ரிலீஸ் தள்ளிப்போனது! ரசிகர்கள் ஏமாற்றம்!! அஜீத் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான வலிமை பல ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு பேசு பொருளாக இருந்து வந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கூட வலிமை அப்டேட் கேட்டு பேனர் பிடித்த வெறித்தனமான ரசிகர்களுக்கு விருந்தளிக்க வலிமை பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆகும் என அறிவிகப்பட்டது. உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள் பட ரிலீசை எதிர் நோக்கி இருந்தனர். இந்த சூழலில் வைரஸ் பாதிப்பும், ஒமைக்ரான் பரவலும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் வைரஸ் பாதிப்புக்குள்ளாவதால் கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. முதற்கட்டமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இரவு நேர ஊரடங்காக இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை மக்கள் நடமாட தட...
மகான் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

மகான் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மகான் படத்தின் ரிலீஸ் அப்டேட்! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் 'மகான்'. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார் சுசி கணேசன்!

வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார் சுசி கணேசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார் சுசி கணேசன்! 5 ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகி பின்னர் திருட்டுபயலே, கந்தசாமி போன்ற வெற்றி படங்களை இயக்கிய சுசிகணேசன். பிறகு இந்தியில் தற்போது ‘தில் ஹே கிரே’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இவருடைய அடுத்த படத்தை வேலுநாச்சியாரின் வாழ்க்கையை கொண்டு உருவாக்குகிறார். இதனை அவருடைய சமூக வலைதளப்பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பதிவில், “தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய வீர மகாராணி வேலுநாச்சியாரின் வீர வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியை இந்நாளில் பெருமையோடு அறிவிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி வேலு நாச்சியார் அம்மையாரை நினைவுகூர்ந்து வாழ்த்தியது, படைப்பாளியான என் பேனா முனைக்கு மேலும் ஆக்கமும், ஊக்கமும் அளித்துள்ளது, இந்த திரைப்படத்தின் மூலம் ஆங்கிலேயர்களோடு ...
மூன்று மொழிகளில் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

மூன்று மொழிகளில் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மூன்று மொழிகளில் வெளியாகும் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்! அஜித்தின் மிரட்டலான  நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பைக் ரேஸிங் குற்றங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக கார்த்திகேயாவும், கதாநாயகியாக ஹுமா குரேஷியும் நடித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வலிமை அப்டேட் என்ற வார்த்தை கூட டிரண்டிங்கில் இருந்தது. இந்த சூழலில் வலிமை டீசர் வெளியாகி பெரும் வர்வேற்ப்பை பெற்றது. யுவனின் இசையில் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் பொங்கல் ரிலீசாக வலிமை வருவதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். அதோடு தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் படம் ரிலீஸ் ஆவதால் இன்னும் சந்தோ...
மாரிசெல்வராஜ்-உதயநிதி படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?

மாரிசெல்வராஜ்-உதயநிதி படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாரிசெல்வராஜ்-உதயநிதி படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?   மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக சொல்லப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக உதயநிதி நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிப்பு வந்தது. அரசியலில் தீவிரமாக இறங்க தீர்மானித்திருக்கும் உதயநிதி சினிமாவுக்கு தற்காலிகமாக குட்பை சொல்லப்போகிறார். தனது கடைசிப் படம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என அவர் மாரி செல்வராஜை அணுகியதாகவும், அவரும்  இயக்க ஒப்புக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அத்துடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோரும் நடிக்க உள்ளனர். மாரி செல்வராஜ், உதயநிதி இருவரது படங்களுக்கும் இதுவரை ரஹ்மான் இசையமைத்ததில்லை. மாரி செல்வராஜின் அரசியல் படங்களுக்கு ரஹ்மானின் இசை எந்தளவு ரசிகர்களை ஈர்க்கு...
சுசிகணேசன் இயக்கும் ‘வஞ்சம் தீர்த்தாயடா’

சுசிகணேசன் இயக்கும் ‘வஞ்சம் தீர்த்தாயடா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  கோலிவுட், பாலிவுட் என்று கலக்கிவரும் இயக்குநர் சுசிகணேசன் 2022 ம் ஆண்டு மீண்டும் தமிழில் படம் இயக்குகிறார். தற்போது இந்தியில் ‘தில் ஹே கிரே’ படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குநர் சுசிகணேசன் தமிழில் இயக்கும் படத்தை அறிவித்துள்ளார். படத்துக்கு ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று டைட்டில் வைத்துள்ளார். 1980 களில் மதுரையில் நடக்கும் நிஜ சம்பவங்களின் பின்னணியை கொண்ட இந்தப் படம் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகவுள்ளது. முழுக்க முழுக்க உண்மை சம்பத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இதன் திரைக்கதை ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கவுள்ளது. இந்தப் படத்தை சுசிகணேசனின் 4 V எண்டர்டெயின்மென்ட் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.  இவருடைய கம்பெனியின் முதல் படைப்பாக ‘வஞ்சம் தீர்த்தாயாடா’ வெளிவரவுள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய முழுமையான விபரங்கள...
வெள்ளிவிழா நாயகன் மோகனை “ஹரா” ஆக்‌ஷன் ஹீரோவாக ரீ எண்ட்ரி செய்யும் இயக்குனர் விஜயஸ்ரீஜி!

வெள்ளிவிழா நாயகன் மோகனை “ஹரா” ஆக்‌ஷன் ஹீரோவாக ரீ எண்ட்ரி செய்யும் இயக்குனர் விஜயஸ்ரீஜி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குநர் விஜயஸ்ரீ அதிரடி ஆக்‌ஷனில், வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் ஹரா தாபரணா கதே திரைப்படம் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் சாருஹாசன், அதன் பின்னர் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன் விஜயஸ்ரீ இயக்கத்தில் 'தாதா 87' படத்தில் கதையின் முன்னணி பாத்திரமாக நடித்து வெற்றியும் பெற்றார். பெண்களின் அனுமதியின்றி அவர்களைத் தொட்டால் சட்டப்படி குற்றம் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்தியது. இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக படத்திற்கு முன் போடப்படும் டிஸ்கிளைமரிலும் இந்த கருத்து இடம்பெற்றது. திரையுலகில் 27 வருடமாக தொடர்ந்து வெற்றிகரமாக மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வரும் நிகில் முருகனை ஒரு நடிகராக காண்பிக்க முடியும் என்று இயக்குநர் விஜயஸ்ரீ தனது அடுத்த படைப்பான் 'பவுடர்' மூலம் நிரூபித்தார். கலர...
முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்!

முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்…. வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
முகத்தில் ரத்த காயத்துடன் விஜய்.... வைரலாகும் புகைப்படம்! விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது புத்தாண்டை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் முகத்தில் ரத்தகாயத்துடன் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
ரைட்டர் படக்குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

ரைட்டர் படக்குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள், நடிகர்கள்
  #ரைட்டர் படக்குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் ரைட்டர் படம் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குனர் பிராங்ளின், மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருக்கு போன் செய்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ' பிரமாதமான படம் ரைட்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ரொம்ப சூப்பரா எல்லோரும் நடிச்சிருக்காங்க , சமுத்திரக்கனி சிறப்பா நடிச்சிருக்கிறார். சிறந்த எதிர்காலம் பிராங்ளினுக்கு இருக்கு . படம் விருவிருப்பாக இருந்தது சீக்கிரம் படம் முடிகிறதே என்கிற உணர்வு வந்தது. சிறந்த படத்தை தயாரிச்சிருக்கீங்க ரஞ்சித் என்று தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தை வெகுவாக பாராட்டியுள்ளார். சூப்பர்ஸ்டார் ...
வலிமை டிரைலர் படைத்த சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

வலிமை டிரைலர் படைத்த சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வலிமை டிரைலர் படைத்த சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்! அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். வெளியான சில மணி நேரங்களில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்தது. தற்போது வரைக்கும் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்....