சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

திரைப்படங்கள்

சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி!

சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவிற்கு நன்றி சொன்ன கார்த்தி! நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் நல்ல படங்களை தயாரித்து வருகிறார். கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, “விருமன்” படத்தை சூர்யா தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி மதுரையில் ஆரம்பமானது. மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் 60 நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து கார்த்தி கூறும்போது, ‘மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால், மொத்தமாக 60 நாட்கள் படப்பிடிப்பை இயக்குனர் முத்தையாவும், ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும் நடத்தி உள்ளார்கள். என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. எதார்த்தமானவர், அவருடன் நடித்த நாள்கள் ஜா...
வேலன் பட டிரைலர்!

வேலன் பட டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வேலன் பட டிரைலர்! தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் “வேலன்” என்னும் காமெடி படத்தினை தயாரித்திருக்கிறார். கவின் இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான முகின் நாயகனாகவும், மீனாக்‌ஷி நாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் டிரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டு இருக்கிறார். இதில் முகின், அப்பனோட பகை மட்டுமில்ல... வீரமும் பிள்ளைக்கு வந்து சேரும்... என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பு பெற்று வருகிறது....
ரைட்டர் “ரைட்” கதை நெகிழ்ந்த வெற்றிமாறன்… கண் கலங்கிய இரஞ்சித்..!

ரைட்டர் “ரைட்” கதை நெகிழ்ந்த வெற்றிமாறன்… கண் கலங்கிய இரஞ்சித்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ரைட்டர் "ரைட்" கதை நெகிழ்ந்த வெற்றிமாறன்... கண் கலங்கிய இரஞ்சித்..! இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகவிருக்கும் ரைட்டர் திரைப்படத்தின் சிறப்புகாட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். படம் பார்த்தபிறகு இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குனர் பிராங்ளினையும் கட்டிப்பிடித்து பாராட்டுக்களை தெரிவித்தார். ரொம்ப முக்கியமான படத்தை தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கிறீர்கள். சமுத்திரக்கனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது. இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட வரிசையில் ரைட்டரும் இருக்கும். தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட படங்களை தயாரித்துவரும் இரஞ்சித்துக்கு எனது...
கபில்தேவ் வெற்றி வரலாற்று திரைப்படத்திற்கு வரி விலக்கு

கபில்தேவ் வெற்றி வரலாற்று திரைப்படத்திற்கு வரி விலக்கு

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள்
கபில்தேவ் வெற்றி வரலாற்று திரைப்படத்திற்கு வரி விலக்கு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ஆம் ஆண்டில் முதன்முறையாக உலக கோப்பையை வென்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக் கதையை அடிப்படையாக கொண்டு ‘83’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. கபீர் கான் இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் ரன்வீர்சிங், கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கபிலின் மனைவியான ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.  1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்தின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார் தயாரிப்பாளர் மது மட்டேனா, கபீர் கான் மற்றும் விஷ்ணு இந்தூரி இணைந்து தயாரிக்கும் '83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  கடந்த ஆண்டு ரன்வீர் சிங், தனது பிறந்தநாளில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் வரும் 24ம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி...
கோமாளி இயக்குனரை சந்தித்த யுவன் சங்கர் ராஜா!

கோமாளி இயக்குனரை சந்தித்த யுவன் சங்கர் ராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
கோமாளி இயக்குனரை சந்தித்த யுவன் சங்கர் ராஜா! ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘கோமாளி’. இப்படத்தை இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். ‘கோமாளி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
கையில் சுத்தியலுடன் நயன்தாரா… வைரலாகும் வீடியோ!

கையில் சுத்தியலுடன் நயன்தாரா… வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கையில் சுத்தியலுடன் நயன்தாரா... வைரலாகும் வீடியோ! தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் புரமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நயன்தாரா சுத்தியலுடன் வந்து ‘காலம் ஒரு துரோகி...’ என்று வசனம் பேசுகிறார். இந்த புரமோ வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது – பிரபல நடிகை!

சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது – பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது - பிரபல நடிகை! சமுத்திரக்கனி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ரைட்டர். நீலம் புரடக்ஷன் சார்பில் பா ரஞ்சித் தயாரித்திருக்கும் இப்படத்தில் இனியா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இனியா பேசும் போது, ரைட்டர் படத்தின் இயக்குனர் பிராங்க்ளின் என்னிடம் கதை சொல்லும் போது சிறப்பாக சொன்னார். ஆனால் அதில் என் கதாபாத்திரம் மட்டும் சொல்லவே இல்லை. உங்கள் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் என்று சொன்னார். இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து இருக்கிறேன். ரைட்டர் படத்தில் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது. எதோ முக்கியமான கதாபாத்திரம் நடிக்கிறார் என்று நினைத்தேன். படப்பிடிப்பு தளத்தில் தான் தெரியும் அவர்தான் ஹீரோ என்று. தயாரிப்பாள...
போஸ்டர் டிசைன்களில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சமுத்ரகனியின் ரைட்டர்!

போஸ்டர் டிசைன்களில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சமுத்ரகனியின் ரைட்டர்!

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள்
  போஸ்டர் டிசைன்களில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சமுத்ரகனியின் ரைட்டர்! சமுத்ரகனி படம் என்றாலே ஏதோ ஒரு விஷயம் இருக்கும் என யோசிக்கும் அளவுக்கு சமீபத்திய படங்கள் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இப்போது அதற்கு இன்னும் வலு சேர்க்கும் விதமாக காவல்துறையில் உள்ள ரைட்டர் பதவியில் இருக்கும் சிரமங்களை மிக சீரியசாக சொல்ல வருகிறது ரைட்டர். நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் ரஞ்சித் தயாரிக்கும் இந்த படத்தின் பப்ளிசிட்டி போஸ்டர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வலியுடன் மிக யதார்த்தமான கதையை சொல்வது போன்று வெளியாகி வருகிறது. இந்த டிசைன்கள் அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எகிற விட்டிருக்கிறது. கபிலன், சந்தோஷ் நாராயணன் இருவரும் இந்த டிசைன்களின் மீது காட்டும் ஈடுபாட்டால் தமிழ் சினிமாவில் ரைட்டர் மீதான எதிர்பார்ப்பும் ஏகத்துக்கு எகிறி உள்ளது. நடிகர்கள், ந...
மனதை உலுக்கும் பாடல் மூலம் மீண்டும் கிராமிய பாடகர் அறிமுகம்!

மனதை உலுக்கும் பாடல் மூலம் மீண்டும் கிராமிய பாடகர் அறிமுகம்!

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள்
  மனதை உலுக்கும் பாடல்! மீண்டும் கிராமிய பாடகர் அறிமுகம். “எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி.. “ “ஐஸ்வர்யா முருகன்” திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு ! 'ரேணிகுண்டா' படம் மூலம், திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இவரது இயக்கத்தில், மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் 'ஐஸ்வர்யா முருகன்'. காதலின் பெருமைகளை சொல்லும் தமிழ் சினிமா சரித்திரத்தில் அதன் வேறு பக்கத்தை காட்டும் படமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ஒரு காதலால், காதலர்களின் குடும்பங்களில் என்னென்ன துன்பத்தை தருமென அதன் வலிகளை அழுத்தி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் மூன்றாவது பாடலான “எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி..” எனும் - மனதை உலுக்கும் காட்சியாக உருவான இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. காதல...
சீனியர் கலைஞன் ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை

சீனியர் கலைஞன் ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை

HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  சீனியர் கலைஞன் ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை J.B.J பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயசீலன் தயாரித்துள்ள படம் " ஒபாமா " இந்த படத்தில் பிரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பூர்நிஷா நடித்துள்ளார். மற்றும் ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் T.சிவா,தளபதி தினேஷ், கோதண்டம்,கயல் தேவராஜ், செம்புலி ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ளார். ஒளிப்பதிவு - தினேஷ் ஸ்ரீனிவாஸ் இசை - ஸ்ரீகாந்த் தேவா பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து எடிட்டிங் - B.லெனின் நடனம் - சேகர் ஸ்டண்ட் - தபதி தினேஷ் மக்கள் தொடர்பு - மௌனம் ரவி, மணவை புவன் தயாரிப்பு - ஜெயசீலன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நானி பாலா. படம் பற்றி இயக்குனர் நானி பாலா கூறியதாவது.. ...