மகன் கவுதமுக்கு அப்பாவாகவே Mr.சந்திரமௌலி படத்தில் நடித்துள்ள கார்த்திக்..!
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று புகழப்பட்ட கார்த்திக் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து மகன் கவுதமுக்கு அப்பாவாகவே மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நடித்துள்ளார். அவரிடம் பேசியதில் இருந்து...
நான் கவுதமை வைத்து படம் இயக்குவதற்காக கதை எழுதிக் கொண்டிருந்தேன். அந்த கதை அவருக்கு தெரியாது. ஒருநாள் என்னிடம் வந்து ஒரு கதை கேட்கறீங்களா? என்று கேட்டார். சம்மதித்தேன். திருவை அறிமுகம் செய்துவிட்டு சென்றுவிட்டார். கதை மிகவும் பிடித்ததால் சம்மதித்தேன். நானும் அப்பாவும் சேர்ந்து நடித்ததில்லை. நான் நடிக்க தொடங்கும்போதே அப்பா மறைந்துவிட்டார். அந்த ஏக்கம் எனக்குள் இருந்தது. தனிமையாகவே என்னுடைய சினிமா வாழ்க்கை வேகமாக ஓடியது. அதை சரி செய்ய என்னுடன் நடிக்கும் மூத்த நடிகர்களுடன் மனம் விட்டு பேசுவேன். இப்போது கவுதமிடம் பேசி அவர்கள் உலகத்தை புரிந்துகொள்கிறேன். நிஜ வாழ்க்கையில் நாங்கள் எப்படியோ அப்படித்தான் படத்...









