வெற்றிமாறன்- சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!
வெற்றிமாறன்- சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!
ஜெயமோகன் எழுதிய துணைவன் எனும் சிறுகதையை மையமாக வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். அந்த படத்தில் சூரி தான் ஹீரோ. வெற்றிமாறன், சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவர் ஏற்கனவே அனைத்து பாடல்களுக்கும் இசையமைக்கும் பணியை முடித்துவிட்டார்
வெற்றிமாறன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிப்பதாக இருந்தது. ஆனால் குளிர் அதிகம் உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருவதால் பாரதிராஜாவால் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விலகிவிட்டார்.
பாரதிராஜா விலகிய பிறகு கிஷோரை ஒப்பந்தம் செய்தார் வெற்றிமாறன். ஆனால் அவரும் படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் பாரதிராஜா நடிப்பதாக இருந்த முதிய...









