படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்த சன்னிலியோன் குதிரை சவாரி..!
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது தமிழில் நடிக்கும் வீரமா தேவி படத்தின் படப்பிடிப்பில் படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
வடிவுடையான் அடுத்து இயக்கும் படம் ‘வீரமா தேவி’ இதில் இந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கிறார். சரித்திர கதையாக உருவாகும் இது பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது.
இந்த படத்தில் சன்னி லியோன் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், ‘வீரமா தேவி’ படப்பிடிப்பு தொடங்கியது. இதில் சன்னிலியோன் குதிரை சவாரி செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. அவர் குதிரை மீது சிறிதும் பயமில்லாமல் உட்கார்ந்து வேகமாக வலம் வந்த காட்சி படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்தது....









