விஷாலை தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு வில்லனான அர்ஜுன்
விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் படம் காளி. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் நாயகிகளாக நடித்துள்ளனர்.
காளி படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது கணேசா இயக்கத்தில் ‘திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரும்புத்திரை படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் ஒப்புக் கொ...









