வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

திரைப்படங்கள்

விஷாலின் 34- பட  தகவல் வெளியாகி உள்ளது!

விஷாலின் 34- பட தகவல் வெளியாகி உள்ளது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஷால் நடித்த வீரமே வாகை சூடும் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. தற்போது லத்தி, துப்பறிவாளன்-2, மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. லத்தி படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இது போலீஸ் கதை, துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின் விலகியதால் விஷாலே அந்த படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தொடர்ந்து நடிக்க உள்ள ‘மார்க் ஆண்டனி’ விஷாலுக்கு 33-வது படம். இந்நிலையில், விஷால் நடிக்க உள்ள 34-வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை முத்தையா டைரக்டு செய்ய இருப்பதாகவும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஷால் நடித்து 2016-ல் வெளியான மருது படத்தை முத்தையா இயக்கி இருந்தார். 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். இது அதிரடி சண்டை படமாக உருவாக இருப்பத...
ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் பாகம்!

ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் பாகம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபாசின் பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்துக்கு பிறகு பிரபாஸ் மார்க்கெட் எகிறியது. சம்பளமும் ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது. பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது, எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஈட்டவில்லை. தற்போது ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார். ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து இந்த படம் தயராகிறது. இதில் பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் ராவணனாகவும், கிருத்தி சனோன் சீதையாகவும் நடிக்கின்றனர். ஓம் ராவத் இயக்குகிறார். தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியிட உள்ளனர். இந்த நிலையில் ஆதிபுருஷ் படம் திரைக்கு வந்ததும் அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபாசுடன் இயக்குனர் ஓம் ராவத் இதுகுறித்து பேசியதாகவும்,...
டாணாக்காரன் புது எக்ஸ்பீரியன்ஸ் எனக்கும், ரசிகர்களுக்கும் – விக்ரம்பிரபு

டாணாக்காரன் புது எக்ஸ்பீரியன்ஸ் எனக்கும், ரசிகர்களுக்கும் – விக்ரம்பிரபு

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  டாணாக்காரன் புது எக்ஸ்பீரியன்ஸ் எனக்கும், ரசிகர்களுக்கும் - விக்ரம்பிரபு   https://youtu.be/aMgs-ho3Iz8
NEET மோசடியை சொல்கிறதா  “செல்பி” ? – கோடங்கி விமர்சனம்

NEET மோசடியை சொல்கிறதா “செல்பி” ? – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம், வீடியோ
  NEET மோசடியை சொல்கிறதா "செல்பி" ? - கோடங்கி விமர்சனம்   https://www.youtube.com/watch?v=yusaDlr-q9E  
கமலுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

கமலுடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் புதிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ராஜ்கமல் பிலிம்...
ராஜமௌலி, என்டிஆர், ராம் சரண் ஆகியோர் இணைந்து வெளியிட்ட ஆதிரா

ராஜமௌலி, என்டிஆர், ராம் சரண் ஆகியோர் இணைந்து வெளியிட்ட ஆதிரா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  பிரசாந்த் வர்மா, கல்யாண் தாசரி இணையும் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின்  “அதிரா” படத்தின் முதல் காட்டுத்துணுக்கை,    ராஜமௌலி, என்டிஆர், ராம் சரண் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். கிரியேட்டிவ்  மேதையாக வலம் வரும் படைப்பாளி பிரசாந்த் வர்மா நட்சத்திர நடிகர்களை  வைத்து படம் எடுக்காமல்,  சூப்பர் கதாநாயகர்களைத் தானே உருவாக்கி வருகிறார். ஜாம்பி கான்செப்ட்டை முதல் முறையாக டோலிவுட்டில் அறிமுகப்படுத்திய பிறகு, பிரசாந்த் வர்மா இந்தியாவின்  முதல் அசல் சூப்பர் ஹீரோ படமான ஹனு-மேன் படத்தை , நடிகர் தேசா சர்ஜா  நடிப்பில் உருவாக்கி வருகிறார். இந்நிலையில் மற்றொரு நாயகனை வைத்து இன்னொரு சூப்பர் ஹீரோ படத்தினையும் உருவாக்கவுள்ளார். பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் அதிரா என்ற படத்தின் மூலம் சூப்பர் ஹீரோவாக நாயகன் கல்யாண் தாசரி அறிமுகமாகிறார். இந்தியப் புராணக் கதாபாத்திரங்கள...
ஆர்யா வெளியிட்ட ‘பாட்னர்’ பட ஃபர்ஸ்ட் லுக்

ஆர்யா வெளியிட்ட ‘பாட்னர்’ பட ஃபர்ஸ்ட் லுக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் 'பாட்னர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மொத்வானி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராகவ் படதொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அமைத்திருக்கிறார். ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரா...
நீலம் புரொடக்சன்ஸ் புதிய படத்தின் போஸ்டரை வெளிட்ட பா.இரஞ்சித்!

நீலம் புரொடக்சன்ஸ் புதிய படத்தின் போஸ்டரை வெளிட்ட பா.இரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அட்டக்கத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கிய பா.இரஞ்சித் தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். இவர் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கும் படத்தை 'நீலம் புரொடக்சன்ஸ்' சார்பில் பா.இரஞ்சித் தயாரிக்கவுள்ளார். 'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் இப்படத்திற்கு 'J.பேபி' என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.இரஞ்சித் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார். அந்த போஸ்டரில் அட்டகத்தி தினேஷ், ஊர்வசி, லொள்ளு சபா மாறன் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது....
ஜேஜிஎம் படத்தின் போஸ்டர்!

ஜேஜிஎம் படத்தின் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. அதன்பின்னர் மீண்டும் இந்த கூட்டணி புதிய படத்தில் ஒப்பந்தமாகிவுள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜேஜிஎம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். பூரி ஜெகன்நாத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கி பல்வேறு நாடுகளில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு ஆகஸ்ட் 3ஆம...
கே.ஜி.எப்-2 டிரைலர் செய்த புதிய சாதனை!

கே.ஜி.எப்-2 டிரைலர் செய்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த  படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த டிரைலர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் நாட்டின் அனைத்து மொழிகளையும் சேர்த்து 109 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. ...