”காவி”க்கு மாறிய வெற்றியின் “ஆலன்”
3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடிப்பில் மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிவரும் திரைப்படம் ஆலன். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக மட்டுமல்லாமல் வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
ஆலன் என்பதன் பொருள் படைபாளி.
சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம்.
வாழ்வின் எதிர்பார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இ...









