ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ திரைப்படம் ஜனவரி 24 ஆம் தேதி ரிலீஸ்!
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' திரைப்படம் இம்மாதம் (ஜனவரி) 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!!
தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான்
மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' வரும் ஜனவரி 24 ஆம் தேதி, இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என். இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி பேசியதாவது…,
இயக்குநர் அருண் இந்தக்கதையைப் பலமுறை எங்களிடம் சொல்லி, இறுதியாக முடிவு...









