ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 6
Shadow

காமெடிக்கு என்றும் குறையாத மவுசு! பொங்கல் ரேசில் முதல் வாரத்தில் 50 கோடியை நெருங்கும் மதகஜராஜா!!

 

பொங்கல் ரேசில் முதல் வாரத்தில் 50 கோடியை நெருக்கும் மதகஜராஜா!

 

2025ம் ஆண்டு பொங்கலில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர், வித்தியாசமான இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான், கிருத்திகா உதய நிதியின் இயக்கத்தில் ரவிமோகன் நடித்த காதலிக்க நேரமில்லை, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் முரளிமகன் ஆகாஷ்முரளி அறிமுகமான நேசிப்பாயா என பல படங்கள் ரிலீஸ் ஆனது.

இந்த பட வரிசையில் 12 ஆண்டுகளாக முடங்கி இருந்த சுந்தர்.சியின் மதகஜராஜாவும் ரிலீஸ் ரேசில் களம் இறங்கியது.

இதில் விஷால், சந்தானம், வரலஷ்மி, அஞ்சலி, மனோபாலா, மணிவண்ணன் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

10ம் தேதி வெளியான கேம்சேஞ்சர், வணங்கான் படங்களில் பாலாவின் வணங்கான் ரசிகர்களை ஈர்த்தான். கேம்சேஞ்சர் ரிசல்ட் தமிழில் முதல் காட்சியிலேயே தெரிந்துவிட்டது. பல தியேட்டர்களில் வணங்கான் காட்சிகள் அதிகரித்தன.

12ம் தேதி சுந்தர்.சி, விஷால், சந்தானம் கூட்டணியின் மதகஜராஜா ரிலீஸ் ஆனது. 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம் என்பதால் பழையபடம் என ரசிகர்கள் ஏற்கமாட்டார்களோ என்ற சந்தேகமும் ரிலீஸ் செய்தவர்களுக்கு இருந்த்து.

ஆனால், ரிலீஸ் ஆன முதல் காட்சியில் இருந்தே படம் பயங்கர வரவேற்ப்பை பெற்றதோடு காமெடியில் கலக்கியது.

இதன் காரணமாக ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்த்து. பல ஊர்களில் தியேட்டர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட்து.

ரொம்ப நாளைக்கு பிறகு தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓட்த்தொடங்கியது.

14ம் தேதி பொங்கல் அன்று காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா என இரு படங்கள் ரிலீஸ் ஆனது.

அப்படி இருந்தும் விஷாலின் மதகஜராஜா ஓட்ட்த்தை தடுக்கமுடியவில்லை.

12ம் தேதி ரிலீஸ் ஆகி இன்றுடன் இந்த முதல்வார வசூலில் கிட்ட்த்தட்ட 50 கோடியை இந்த படம் நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 12 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் இப்போது  பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது.

பட்த்தை தயாரித்த ஜெமினி நிறுவனம் பெரும் கடனில் இருந்த நிலையில் பெரு கடனை இந்த படம் தன் வசூல் மூலம் அடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்டாலும் காமெடி படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் மவுசு உண்டு என்பதை மதகஜராஜா படம் நிரூபித்து உள்ளது.

காமெடியனாக இதில் நடித்திருக்கும் சந்தானம் ஹீரோவாக மாறிய பிறகும் இதுபோன்ற காமெடி ரோல்தான் அவருக்கு நிரந்தரம் என்பதை இந்த படம் உணர்த்தி  உள்ளது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இந்த படம் நல்ல வசூலை பெற்று ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிட்த்தக்கது.

 

 

217 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன