முதல் வெற்றி கொடுத்த ’வித் லவ்’ – செளந்தர்யா ரஜினிகாந்த்
சீயோன் (Zion Films) சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் ( MRP Entertainment) இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், ’டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வித் லவ்’ ( With Love ) திரைப்படம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இன்றைய இளைஞர்களின் உலகத்தை காதலை மையமாக வைத்து உருவான இப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழு பத்திரிக்கை ஊடத்தினரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
நடிகர் சரவணன் பேசுகையில், “இந்த படத்தில் நான் நடிக்கக் காரணமாக இருந்தது முதலில் இயக்குநர் மதன். அதே மாதிரி மகேஷ் சார், மேலும் இந்த படத்தின் முழு...









