பத்மாவத் பட ரிலீஸ் கொந்தளிப்பு… அரசு பஸ் எரிப்பு திரையிட தியேட்டர்கள் மறுப்பு
பத்மாவத் படத்தை திரையிடலாம் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவையும் மீறி பத்மாவத் படத்துக்கு பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
பத்மாவத் படம் திரையிட இருந்த தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தியேட்டர்களுக்கு அருகில் சாலையோரம் இருந்த பெட்டிக்கடைகள், மால்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி தீவைத்தனர். இதனால், சேதம் ஏற்படுத்திய கும்பலை விரட்ட போலீசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, அங்கு இருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த வன்முறை தொடர்பாக ஏராளமான நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வன்முறை நீடிப்பதால், அகமதாபாத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இன்று மாலை குருகி...









