சனிக்கிழமை, மே 30
Shadow

அமீர்கான் வழியில் அஜித்

ஜித்துக்கு எப்போதுமே இரட்டை வேட செண்டிமெண்ட் உண்டு. அவர் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் அத்தனையும் வெற்றி. அஜித் கடைசியாக 8 ஆண்டுகளுக்கு முன் அசல் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
எனவே இரட்டை வேடங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் இரட்டை வேடங்கள் என்கிறார்கள். இப்போது வயதான வேடத்துக்கான படப்பிடிப்பு சென்றுகொண்டிருக்கிறது.
அடுத்து இளமையான அஜித்துக்கான காட்சிகள் படம் பிடிக்கப்படும். இந்தியில் அமீர்கான் தங்கல் படத்தில் நடித்தபோது முதலில் தொப்பையுடன் கூடிய வயதான வேடத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னர் உடலை குறைத்து இளமையாக நடித்தார். அது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. அதேபோன்றதொரு ரிஸ்க்கை தான் அஜித்தும் எடுத்திருக்கிறார். முதலில் வயதான தோற்றத்தில் நடிக்கும் அஜித், அதன் பின்னர் உடல் எடையை குறைத்து இளமையான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார்.
362 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன