
நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தில் பாரதிய ஜனதாவை எதிர்த்து பிரசாரம் செய்ததுடன் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றது பற்றி தனது டுவிட்டரில் பிரகாஷ்ராஜ் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை தொடங்கி விட்டது. பாரதிய ஜனதா மோசமான அரசியல் செய்ய தொடங்கிவிட்டது. இனி எந்த மக்கள் பிரச்சினையில் சிக்குகிறார்கள் என்ற எந்த தகவலும் வெளியே வராது.
ஆனால் எம்.எல்.ஏக்கள் எங்கே செல்கிறார்கள். எந்த சொகுசு விடுதியில் எந்த எம்.எல்.ஏ. இருக்கிறார் என்ற புகைப்படம் அரசியல் சாணக்கியத்தனம் என்று வரிசையாக தலைப்பு செய்திகள் வரப்போகிறது. சந்தோஷமாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
இவ்வாறு வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
607 Views
