வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

திரைப்படங்கள்

‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் – ரஜினி மகள் விருப்பம்!

‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் – ரஜினி மகள் விருப்பம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் - ரஜினி மகள் விருப்பம்! சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம், வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் குடும்பத்தினருடன் ‘அண்ணாத்த’ படத்தைப் பார்த்த ரஜினியின் மகள் சௌந்தர்யா. படத்தைப் பற்றி தனது ஹூட் செயலில் போட்ட குரல் பதிவில், “படம் பார்த்துவிட்டு கண்களில் கண்ணீருடன் சிவா சாருக்கு நன்றி சொன்னேன். நீங்கள் செய்திருப்பது மேஜிக் என்பதையும் தாண்டி சொல்ல வார்த்தைகள் இல்லை. தலைவரும் - நீங்களும் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும்” என்று அவர் அந்த பதிவில் கூறியிருக...
இயக்குனர் அவதாரம் எடுக்கும் கார்த்தி, ஜோதிகா!

இயக்குனர் அவதாரம் எடுக்கும் கார்த்தி, ஜோதிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குனர் அவதாரம் எடுக்கும் கார்த்தி, ஜோதிகா! திரையுலகில் கருப்பு வெள்ளை காலத்திலிருந்து நடிகைகள் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தாலும் இயக்குனராக மாறுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அதில் பானுமதி, சாவித்ரி, விஜய் நிர்மலா ஆகியோர் ஒரு திரைப்பட இயக்குநர்களாக மாறியிருக்கிறார்கள். இப்போது உள்ள நடிகர்களில் சிலர்க்கு மட்டும்தான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதில் கார்த்தி இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்தோடு இருப்பவர். இவர் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அதோடு ஜோதிகாவும் தீவிர கதை விவாதத்தில் இருப்பதாகவும் இவரும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படங்களை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க இருக்கிறது....
‘இந்தியன் 2’ பட வழக்கு முடித்து வைப்பு!

‘இந்தியன் 2’ பட வழக்கு முடித்து வைப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘இந்தியன் 2’ பட வழக்கு முடித்து வைப்பு! நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 திரைப்படம் உருவானது. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்த நிலையில், திடீரென படப்பிடிப்பு பணிகள் நின்றுபோனது. இந்த நிலையில், இந்தியன்-2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் தொடர்ந்த, இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து லைகா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லைகா நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதி நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது மத்தியஸ்த நடைமுறையில் பங்கேற்க உ...
சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்!

சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா கேட்டதும் பட தலைப்பை விட்டுக்கொடுத்த பா.இரஞ்சித்! நடிகர் சூர்யாவின் 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நேற்று சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய நடிகர் சூர்யா, ஜெய் பீம் பட தலைப்பு குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “ஜெய் பீம் படத்தின் தலைப்பின் உரிமையை முதலில் இயக்குனர் பா.இரஞ்சித் வைத்திருந்தார். அவரிடம் சென்று கேட்டபோது, எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல், ‘ஜெய் ப...
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘மகான்’!

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘மகான்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘மகான்'! நடிகர் விக்ரமின் 60-வது படம் ‘மகான்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ‘மகான்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜகமே த...
நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு – எஸ்.ஜே.சூர்யா!

நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு – எஸ்.ஜே.சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு - எஸ்.ஜே.சூர்யா! நல்ல வித்தியாசமான படைப்புகளைக் கொடுக்கக்கூடிய இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. சில ஆண்டுகளாகவே அவர் எந்த ஒரு படத்தையும் எடுக்கவில்லை. நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா நடித்த மாநாடு படம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியாக இருக்கிறது. இதில் காவல்துறை அதிகாரியாக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சமீபத்தில் இதன் டப்பிங் வேலைகளை முடித்த அவர் தனது மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார். அதில், 8 நாள் மாநாடு டப்பிங் வேலையை 5 நாளில் முடித்தேன். என்னுடைய நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு. குறைந்தது 10 நாள் ஓய்வு வேண்டும் என்று எல்லா அவயங்களும் கெஞ்சுகின்றன. ஆனால், கடைசி அவுட்புட்டை பார்த்த பிறகு, உங்கள் எல்லோருக்கும் ஒன்றை சொல்லிருக...
சிம்புவின் தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தயாரிப்பாளர் புகார்!

சிம்புவின் தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தயாரிப்பாளர் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிம்புவின் தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தயாரிப்பாளர் புகார்! பட அதிபர் மைக்கேல் ராயப்பன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்த ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டேன். இந்த திரைப்படம் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் சிம்பு என்னை அழைத்து, இந்த படத்தை இத்துடன் ரிலீஸ் செய்து விடலாம் என்றும், ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் நான் ஒரு திரைப்படத்தை இலவசமாக நடித்து தருவேன் என்றும் உறுதியளித்தார். எனவே நான் அந்த படத்தை வெளியிட்டேன். படம் சரியாக ஓடாததால் எனக்கு ரூ.15 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதன் பின்னர் என்னால் அடுத்த திரைப்படம் தயாரிக்க முடியவில்லை. அதேநேரம் சிம்பு தரப்பில், தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்றா...
தேசிய விருது பெற்ற தமிழ் கலைஞர்கள் – புகைப்பட தொகுப்பு!

தேசிய விருது பெற்ற தமிழ் கலைஞர்கள் – புகைப்பட தொகுப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தேசிய விருது பெற்ற தமிழ் கலைஞர்கள் - புகைப்பட தொகுப்பு! 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. சிறந்த படம் அசுரன் தேர்வு செய்யப்பட்டு படத்தை தயாரித்த கலைப்புலி தாணுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் - தனுஷ், சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி, சிறந்த ஒலி அமைப்பு - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு), சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (விஸ்வாசம்), சிறப்பு ஜூரி விருது - பார்த்திபன் (ஒத்த செருப்பு) வழங்கப்பட்டது. தாதாசாகேப் பால்கே விருது பெறும் ரஜினிகாந்த்!   அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெறும் தனுஷ்!   சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக துணை நடிகர் விருது பெறும் விஜய் சேதுபதி!   சிறந்த ஒலி அமைப்பு - ரசூல் பூக்குட...
பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்!

பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்! ’சார்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 3’ படங்களுக்குப் பிறகு, ஆர்யா நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்யாவின் அடுத்தபடம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர். இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தில் கதாநாயகியாக ’ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். மேலும் சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார்....
குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
குவியும் பட வாய்ப்பு... சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ‘சர்காரு வாரி பாட்டா’, சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’, நானிக்கு ஜோடியாக ‘தசரா’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. நானி ஜோடியாக தசரா படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும், ...