டிச.28ம் தேதி ஆண்டின் கடைசியில் ரசிகர்களை வளைக்க வரும் அதர்வாவின் பூமரங்..!
இயக்குனர் கண்ணன் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் 'பூமராங்' படம் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்துதல் தான் மொத்த குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இயக்குனர் கண்ணன் கூறுகையில், "டிசம்பர் 28ஆம் தேதி பூமராங் படம் வெளியாக இருப்பதால் ஒட்டு மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கடந்த ஒரு ஆண்டாகவே குழுவில் அனைவருக்கும் சவாலாக இருந்தது, குறிப்பாக இந்த படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க மிகவும் துல்லியமான முயற்சிகள் எடுத்த அதர்வா முரளிக்கு. இந்த படம் மிகச்சிறப்பாக உருவாக எனக்கு மொத்த குழுவும் பக்க பலமாக இருந்தது ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் முடிவில்லாத கடின உழைப்புக்கு இது புத்தாண்டு பரிசாக இரு...









