விவசாய மேம்பாட்டுக்கு ஒரு கோடி வழங்கிய சூர்யா கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பரபரப்பு
கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1 கோடி ரூபாய் வழங்கினார் நடிகர் சூர்யா . விவசாயத்தில் சாதனை படைத்த 5 பேருக்கு தலா இரண்டு லட்சம் வழங்கப்பட்டது.
கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி , 2D ராஜ் சேகர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து , இளவரசு , ஸ்ரீமண் , மனோஜ் குமார் , நாயகி சயீஷா , பிரியா பவானி ஷங்கர் , அர்த்தனா பினு , பானு ப்ரியா , மௌனிகா , ஜீவிதா , இந்துமதி , கலை இயக்குனர் வீர சமர் , எடிட்டர் ரூபன் , இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்ட படக்குழுவுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் சூர்யா பேசியது :- “ எல்லா புகழும் இறைவனுக்கே “ இயக்குநர் பாண்டிராஜை தவிர இப்படத்தை யாராலும் சிறப்பாக எடுத்து வெற்றி படமாக இதை கொடுத்திருக்க முடியாது. பிளாக் பஸ்டர் மே...









