பரத் – அஜய் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2 ‘படத்தின் டீசர் வெளியீடு!
பரத் - அஜய் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2 'படத்தின் டீசர் வெளியீடு
தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன் - ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காளிதாஸ் 2' திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜ...









